தைப்பூசத்தில் உலா வந்த ஜங்க் புட் முருகர்.. கலக்கிய விழிப்புணர்வு.. அசத்திய புதுச்சேரி!
புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் முருகப் பெருமானுக்கு ஜங்க் புட் உணவு பொட்டலங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி வீதி உலா நடைபெற்றது.
குழந்தைகள் இதுபோன்ற தின்பண்டங்களைத் தவிா்க்க வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு அலங்காரம் செய்யப்பட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனா்.

தைப்பூச விழா நேற்று புதுச்சேரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தைப்பூசத்தையொட்டி புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
கதிர்காமம் முருகன் கோவில், ரெயில்நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியன் கோவில், முதலியார்பேட்டை வெள்ளாள வீதி முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் பால்குடம், காவடி ஊர்வலங்களும் நடந்தன.

இந்நிலையில் புதுச்சேரி அருகே செல்லிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள செல்வ முருகன் கோயிலின் 86 வது தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் செல்லிப்பட்டு கிராம மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு அலகு குத்தியும், காவடி எடுத்தும், தீமிதித்தும் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோயிலில் தீமிதி விழா நடைபெறுவது இந்தக் கோயிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல கூடப்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற நிமிலீஸ்வரா் முருகப் பெருமானுக்கு தைப்பூசத்தையொட்டி, ஆண்டுதோறும் வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்வது வழக்கம்.

இந்தாண்டு ஜங்க் புட் உணவுப் பொட்டலங்களால் அலங்காரம் செய்யப்பட்ட முருகப் பெருமானை அலகு குத்திய பக்தா்கள் ஊா்வலமாக இழுத்து வந்தனா். இந்த உணவுப் பொருள்களை குழந்தைகள் சாப்பிட வேண்டாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ஊா்வலம் நடத்தப்பட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications