ஏடிஎம் இயந்திரத்தை பூட்ட மறந்த ஊழியர்கள்.. கேட்பாரற்று கிடந்த 12 லட்சம்.. புதுச்சேரியில்!
புதுச்சேரி: புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் ரூபாய் 12 லட்சம் பணத்துடன் பிரபல வங்கியின் ஏ.டி.எம் இயந்திரம் திறந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்திரப்பாளையம் பகுதியில் கனரா வங்கியின் ஏ.டி.எம் மையம் இயங்கி வருகிறது. இங்கு இன்று பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர் ஏ.டி.எம் இயந்திரம் திறந்தநிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கும் விரைந்து வந்த போலீசார் கனரா வங்கியின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருவதால், அந்த அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர்.


விசாரணையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர்கள் முஸ்தபா மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் ரூபாய் 12 லட்சம் பணத்தை ஏ.எடி.எம் இயந்திரத்தில் நிரப்பிய பின்னர், மெக்னேட் கருவியின் பூட்டை சரியாக மூடாததால் கதவு தானாக திறந்திருந்தது தெரியவந்தது. மேலும் உள்ளே இருந்த பணத்தை ஆய்வு செய்தபோது, பணம் சரியாக இருந்ததால் பூட்டை பூட்டிவிட்டு அதிகாரிகள் சென்றனர்.


இருப்பினும் ஏ.டி.எம் இயந்திரத்தின் பூட்டை பூட்டாமல் விட்டதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்ற கோணத்தில் மேட்டுப்பாளையம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications