புதுவையில் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.. ஆளப் போவது யார்?
புதுவை: புதுவை மாநிலத்தில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
புதுவை மாநிலத்தில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.

இது புதுவை கூட்டணி
புதுவையை பொறுத்தவரை காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை கூட்டணி அமைத்து மோதுகின்றன. எதிர்புறம் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேறு ஒரு கூட்டணியாக மோதுகின்றன.

எத்தனை வேட்பாளர்கள்
இதுதவிர மநீம, நாம் தமிழர், அமமுக, தேமுதிக மற்றும் சுயேட்சைகளும் போட்டியிட்டன. மொத்தம் 324 வேட்பாளர்கள் தேர்தலை களத்தில் உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. லாஸ்பேட்டை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் உள்பட சில மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

முன்னணி நிலவரம் எப்போது?
காலை 11 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மையங்களில் 5 மேஜைகளில் வைத்து வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் 3 கட்டமாக பிரித்து எண்ணப்படுகிறது.

முழு ஊரடங்கு
இறுதி முடிவுகள் மாலைக்குள் தெரிந்து விடும் என்று கூறப்படுறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு புதுவையில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். அங்கு முழு ஊரடங்கு போடப்பட்டு உள்ளதால் தேர்தல் பணியில் ஈடுபடும் வேட்பாளர்கள், முகவர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோரை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.












Click it and Unblock the Notifications