10 ஆண்டுக்கு முன் விஜயை டென்சனாக்கிய பேட்டி இதுவா? 2013-ல் விஜய் ட்விட்டரில் என்ன சொன்னார் தெரியுமா?
புதுச்சேரி: 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலின்போது தான் சொன்னதை வேறு விதமாக எழுதியதால், நேர்காணல்களில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டேன் என விஜய் தெரிவித்த நிலையில் 2013 ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு தற்போது பகிரப்பட்டு வருகிறது.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற 13 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இசைவெளியீட்டு விழா ரத்து
பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட 3 பாடல்களும் டீசரும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தன. இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு, அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

10 ஆண்டுக்கு பின் விஜய் நேர்காணல்
இந்த நிலையில்தான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடிகர் விஜய் 10 ஆண்டுகளுக்கு பின்னர் நேர்காணல் ஒன்றில் பேச இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்து நேற்று தனியார் தொலைக்காட்சியில் அந்த நேர்காணல் ஒளிபரப்பானது. பீஸ்ட் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு நடிகர் விஜய் பதிலளித்தார்.

விஜய் சொன்ன காரணம்
அப்போது 10 ஆண்டுகளாக ஏன் நேர்காணல் எதுவும் கொடுக்கவில்லை என விஜய்யிடம் நெல்சன் திலீப்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜய், "ஒரு நேர்காணலில் நான் சொன்ன விசயத்தை தவறாக புரிந்துகொண்டு வேறுவிதமாக எழுதினார்கள். அதைபார்த்து என்னிடம் பலர் கேள்வி எழுப்பினர். நான் அவர்களிடம் விளக்கமளித்தேன். இதுபோன்ற பிரச்சனைகள் வருவதால் நேர்காணல் கொடுக்காமல் இருந்து வந்தேன்." என்றார்.
|
2013 ஆண்டில் விஜய்யின் ட்விட்டர் பதிவு
இந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு விஜய் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட பதிவு தற்போது அவரது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த பதிவில் ஒரு குறிப்பிட்ட இதழில் வெளியான தனது பேட்டி குறித்து பக்கத்தின் படத்தை வெளியிட்டு, "அவர்களே பதில்களை உருவாக்கிக் கொள்ளும்போது பேட்டி கொடுப்பதில் என்ன பயன்"? எனக் கேட்டு இருக்கிறார் விஜய்.












Click it and Unblock the Notifications