புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள்.. மிஸ் பண்ணுறேன்.. எஸ்பி இஷா சிங் உருக்கம்
புதுச்சேரி: 'புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை 'மிஸ்' பண்ணுகிறேன். நான் டெல்லிக்கு மாறுதலாகி சென்றாலும் புதுச்சேரி, தமிழ்நாடு என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும்' என்று பெண் காவல் அதிகாரி இஷா சிங் சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு மாறுதலாகி போன எஸ்பியான இஷா சிங் கூறியுள்ளார்
புதுச்சேரியில் கடந்த மாதம் 9-ந்தேதி விஜய் பங்கேற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் கூட்டத்தினரை கட்டுப்படுத்தும் பணியை அம்மாநில லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் எஸ்பி இஷா சிங் கவனித்தார். இவர் ஐ.ஆர்.பி.என். கமாண்டர் ஆவார். இவர் தவெக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக எடுத்த நடவடிக்கைகள் பெரிய அளவில் பேசுபொருளானது.புஸ்ஸி ஆனந்த் தொடங்கி, தவெகவின் ஒவ்வொரு நிர்வாகிகளையும் அவர் கையாண்டவிதம் மற்றும் நெருக்கடி நிலையில் திறம்பட சமாளித்தது போன்ற காரணங்களால், இஷா சிங்குக்கு பாராட்டுகள் குவிந்தன.

குறிப்பாக புஸ்ஸி ஆனந்திடம், இஷாசிங், 'காவல்துறை என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் உத்தரவிடாதீர்கள். இங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் நாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும், பதில் சொல்ல வேண்டும். கரூரில் நடந்த சம்பவத்தில் 41 பேர் பலியான சம்பவம் நினைவில் இல்லையா? அதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்கு தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளை சரியாக பின்பற்றுங்கள்' என்று கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் எஸ்பி இஷா சிங் கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்திருந்தது. இது புதுச்சேரி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. சிலர் விஜய் ரசிகர்களை கையாண்ட விதத்தை பாராட்டினாலும் மேலிடத்தில் சில மறைமுக அழுத்தங்கள் வந்ததாக விமர்சித்துள்ளனர்.
புதுச்சேரி மக்கள் சிலர், சமூக வலைதளத்தில் இஷா சிங் சீருடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் உள்ள 'மெல்ல விடை கொடு.. விடை கொடு.. மனமே, இந்த நினைவுகள் நினைவுகள் கனமே' என்னும் பாடலை ரீல்ஸ்சாக வெளியிட்டிருந்தார்கள். சிலர் 'மிஸ்.யூ.மேம்', உங்களது கடின உழைப்பு மற்றும் சிறந்த சேவைக்கு 'ராயல் சல்யூட்' என்று கூறியிருந்தார்கள்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இஷா சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை 'மிஸ்' பண்றேன். நான் டெல்லிக்கு மாறுதலாகி சென்றாலும் புதுச்சேரி, தமிழ்நாடு என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும்' என்று மிகவும் உருக்கமாக பதிட்டிருக்கிறார். இஷா சிங், தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் நீதிபதி பதவிக்கான போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications