புதுச்சேரி கடலில் அதிசயம்.. மீண்டும் மீண்டும் நடந்த ஒரே மாற்றம்.. பொதுமக்கள் திகைப்பு
புதுச்சேரி: புதுச்சேரி கடல் மீண்டும் நிறம் மாறியதால் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். முன்னதாக அந்த நீரை சோதனைக்காக ஆராய்ச்சியாளர்கள் எடுத்து சென்றனர். இதனிடையே வானிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்ற அச்சமும் நிலவுகிறது.
புதுச்சேரியின் தனித்துவம் என்பது அதன் கடற்கரையும் அதனை ஒட்டிய பிரெஞ்சு ஸ்டைல் கட்டிடங்களும் தான். புதுச்சேரி முழுமையாக பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த பகுதி என்பதால் பிரான்ஸின் கட்டிட கலைகள் தெருக்கள் அனைத்திலும் பார்க்க முடியும்.

புதுச்சேரி கடற்கரை மிகவும் அற்புதமான பகுதியாகும். புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எல்லாருமே விரும்பி செல்லும் இடம் புதுச்சேரி பீச் தான்.இங்கு தான் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அதன் அழகை தினமும் ரசித்து செல்வார்கள்.
புதுச்சேரி பீச் என்பது ராக் பீச் என உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது. சென்னை மெரினா போல் புதுச்சேரியில் உள்ள பிரபலமான பீச் ஆகும். இது 2 கி.மீ. தூரம் நீளம் கொண்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் வாக்கிங் செல்வோர் இந்த சாலையில் சென்று கடலின் அழகை ரசிப்பார்கள். பாறைகளும் பாலமும் உள்ள இந்த கடற்கரை கொஞ்சம் ஆவேசமான கடற்கரையாகும். இங்கு சர்வசாதாரணமாக அலைகள் மிக வேகமாக வரும்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 17-ந்தேதி அன்று புதுச்சேரியின் பழைய வடிசாராய ஆலையின் பின்புறம் உள்ள குறிப்பிட்ட பகுதியில் கடல் நீர் செம்மண் கலரில் நிறம் மாறியிருந்தது. பிற பகுதிகளில் நீல வண்ணத்தில் இருக்கும் போது, அந்த பகுதி மட்டும் செம்மண் நிறத்தில் மாறியிருந்தது. ஒரு கிலோ மீட்டர் அளவில் குருசுகுப்பம் பகுதி வரை செம்மண் நிறமாக காட்சியளித்தது.
இது சுற்றுலா பயணிகளுக்கு ஆச்சர்யத்தை அளித்ததால் தலைமை செயலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் இறங்கி, நிறம் மாறியிருந்த கடலின் அழகை புகைப்படம் எடுத்து அப்போது மகிழ்ந்தார்கள். கடல் நீர் நிறம் மாறியதற்கான காரணம் என்ன என்று அப்போது தெரியவில்லை. அந்த நீரை சோதனைக்காக ஆராய்ச்சியாளர்கள் எடுத்து சென்றார்கள். அதன்பிறகு பழைய நிலையை கடல் எட்டியிருந்தது.
இந்த நிலையில் ஏற்கனவே கடல் நீர் செம்மண் கலரில் மாறியிருந்த அதே பகுதியில் மீண்டும் இன்று காலை கடல் நீர் நிறம் மாறியது. செம்மண் கலரில் மாறிய கடலை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றார்கள். மீண்டும் மீண்டும் புதுச்சேரி கடல் நிறம் மாறியதால் அந்த பகுதியில் என்ன ஆனது என்று மீனவர்கள் அச்சம் அடைந்தனர். அதேநேரம் எதாவது பிரச்சனை வருமோ என்று அச்சமும் அடைந்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications