வசதியான குடும்பங்களுக்கு ‘கௌரவ ரேஷன் கார்டு’ வழங்கப்படும் - புதுச்சேரி அரசு அறிவிப்பு!
கௌரவ குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி : அரசின் இலவசங்கள் தேவைப்படாத, வசதியான குடும்பங்களுக்கு கவுரவ குடும்ப அட்டை வழங்கப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. அதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் மஞ்சள் மற்றும் சிவப்பு என இரு விதமான குடும்ப அட்டைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதில், சிவப்பு ரேஷன் அட்டை ஏழை பொதுமக்களுக்கும், மஞ்சள் வண்ண அட்டை அரசு ஊழியர்கள் மற்றும் வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருக்கும் பலர் அரிசி உள்ளிட்ட இலவச பொருட்களை பெறாத நிலையில், அவற்றின் மூலம் ரேஷன் கடைகளில் மோசடிகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது.

கௌரவ ரேஷன் கார்டு
இதையடுத்து, இலவச அரிசி பெறாதவர்களின் சிவப்பு குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில், இலவசங்கள் பெற விரும்பாத வசதியானவர்கள் தங்களின் குடும்ப அட்டைகளை கௌரவ குடும்ப அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இலவசங்கள் தேவைப்படாவிட்டால்
இது தொடர்பாக புதுச்சேரி மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடிமைப்பொருள் வழங்கல் துறையால், கவுரவ குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளது. அரசின் இலவசங்கள் தேவைப்படாத, வசதி வாய்ந்த குடும்பங்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதுச்சேரி அரசின் கவுரவ குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.

சிறப்பு குடிமக்கள்
கவுரவ குடும்ப அட்டை பெற்றவர்கள், புதுவையின் சிறப்பு பிரஜைகளாக கருதப்பட்டு குடிமைப்பொருள் வழங்கல் துறையால் அளிக்கப்படும் அரசின் இலவசங்கள் எதுவும் வழங்கப்படாது. புதுச்சேரியில் தற்போது அனைத்து வகை (சிவப்பு / மஞ்சள் நிறம்) குடும்ப அட்டை பெற்றுள்ளவர்களும் கவுரவ குடும்ப அட்டை பெற தகுதி வாய்ந்தவர்கள்.

வாட்ஸ் அப் மூலம்
புதிய கவுரவ குடும்ப அட்டை வேண்டுபவர்கள் குடும்ப தலைவர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் அசல் குடும்ப அட்டையையும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் ஒப்படைத்து கவுரவ குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம். உதவிக்கு 94421 94480 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு அல்லது அதே எண்ணில் Whatsapp/ குறுஞ்செய்தி மூலமாக தகவல் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications