வெறிச்சோடியது புதுச்சேரி சுற்றுலாத் தளங்கள்.. கொரோனா பீதியால் பலருக்கும் பொருளாதார அடி
புதுச்சேரி: கொரோனா வைரஸ் அச்சத்தால் புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின்றி சுற்றுலாத் தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. கோரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கோரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி அரசும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே கொரோனா அச்சத்தால் புதுச்சேரியில் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா நகரமான புதுச்சேரியில் கடற்கரை, படகு இல்லம், ஆரோவில், ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, மணக்குள விநாயகர் கோவில் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாத் தளங்கள் உள்ளன.

புதுச்சேரியை பொறுத்தவரை சுற்றுலாப் பயணிகள் வருகைதான் நகரத்தை சிறப்பாக வைத்திருக்கும். தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதால் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருவதை தவிர்த்துள்ளனர். இதனால் ஓட்டல்களில் அறைகள் பல காலியாக உள்ளன. புதுச்சேரி நகரே சுற்றுலாவை நம்பி உள்ள நகரம் என்பதே பொருளாதார ரீதியாக மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

கடற்கரை, தாவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது. வெளிமாநிலங்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்தே புதுச்சேரியை சுற்றிப்பார்த்தனர்.

-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications