புதுச்சேரி ரோட்டில் ஒரே டிராபிக்.. ரூ.10 காயினுக்கு கோழி பிரியாணி வித் முட்டை.. மக்கள் குஷி.. சபாஷ்
புதுச்சேரி: 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரியில் ஒருவர் புது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.. இதற்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.
மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009-ம் வருடம், 10 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்தது. அதற்கு பின்பு, 10 ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

வதந்திகள்: காரணம், அடிக்கடி பரவி வரும் வதந்திகள் காரணமாக கடைக்காரர்கள், வணிகர்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவற்றை வாங்க மறுக்கிறார்கள். குறிப்பாக, பஸ், கண்டக்டர்கள், கடைக்காரர்கள், சில வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக மக்கள் புகார் தெரிவித்தபடியே உள்ளனர்..
10 ரூபாய் நாணயங்களை வாங்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் மாநில அரசு அறிவுறுத்த வேண்டும், பஸ்களில் இது தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித மறுப்புமின்றி நாணயங்களை வாங்க வேண்டும், வங்கிகளிலும் இதுகுறித்த அறிவிப்பை ஒட்ட வேண்டும், என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டும்கூட, 10 ரூபாய் நாணயத்தை சில கடைக்காரர்கள் வாங்குவதில்லை.
புதுச்சேரி நாணயம்: மொத்தத்தில், 10 ரூபாய் காயின் என்றாலே, அது செல்லாத நாணயம் போல பலரும் கருதும்படி ஆகிவிட்டது.. தமிழகத்தைவிட புதுச்சேரியில் நிலைமை இன்னும் மோசம்.. 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் யாருமே வாங்குவதேயில்லை.. இதனால், புதுச்சேரியில் 10 ரூபாய் பெருமளவில் பயன்பாட்டிலும் இல்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், "புதுச்சேரி மக்களால் வாங்க மறுக்கப்படும் 10 ரூபாய் நாணயம் செல்லும்" என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் ஓட்டல் நிர்வாகம் ஒன்று சலுகையை அறிவித்துள்ளது..
ஸ்பெஷல் அறிவிப்பு: புதுச்சேரி நகர பகுதியில் அதாவது, புஸ்சி வீதி, பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் அருகில் அமைந்துள்ள இந்த ஓட்டலில் காணும் பொங்கலன்று ஸ்பெஷல் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 ரூபாய் நாணயத்துக்கு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பை பார்த்ததுமே, புதுச்சேரி மக்கள் ஆர்வத்துடன் இன்று அந்த ஓட்டலுக்கு படையெடுத்தனர்.. இன்று மதியம் 12 மணியளவில் ஆயிரக்கணக்கானோர் ஓட்டல் முன்பு திரண்டனர். இதனால் கொஞ்ச நேரத்திற்கெல்லாம், ஓட்டல் முன்பு கூட்ட நெரிசல் அதிகமாகிவிட்டது.. முன்கூட்டியே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும், கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.. பிறகு, திரண்டு வந்த கூட்டத்தை, வரிசையில் நிற்குமாறு சொல்லி, அவர்களை ஒழுங்குப்படுத்தினார்கள்..
10 ரூபாய் பிரியாணி: பொதுமக்களும் கையில் 10 ரூபாய் காயினுடன் 1 கிமீ தூரத்துக்கு வரிசைகட்டி நின்றனர்.. சரியாக 12 மணிக்கு, 10 ரூபாய் நாணயத்துக்கு, பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது.
வெறும் அரை மணி நேரத்தில், மொத்தம் 500 பேருக்கு பிரியாணி பொட்டலத்தை ஓட்டல் நிர்வாகம் வழங்கியது.. இதனால், 2 மணி நேரமாக வரிசையில் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடையவும், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்...
சபாஷ்: ஓட்டல் நிர்வாகத்தின் இந்த ஸ்பெஷல் பிரியாணி அறிவிப்பினால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது என்றாலும், இந்த 10 ரூபாய் காயின் விழிப்புணர்வு முயற்சி, புதுச்சேரி மக்களால் பாராட்டை பெற்று வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications