ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும்! ஏனோ தானோன்னு நான் பேச மாட்டேன்! டிடிவி தினகரன் 'தில்' பதில்!
புதுச்சேரி: ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநர் விவகாரத்தில் பொறுமை காத்து வந்த அவர் தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு பிறகு வெளிப்படையாகவே ஆளுநருக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் தினகரன்.
புதுச்சேரியில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்
எவ்வளவோ போராட்டங்களுக்கும், உயிர் தியாகங்களுக்கும் பிறகு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டதாகவும் அண்ணா சூட்டிய பெயரை மாற்ற வேண்டும் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றும் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆளுநர் அவர் வகிக்கும் பதவிக்குரிய வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் இது தமிழ்நாடு எனவும் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். மேலும், ஆஉநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் தமிழ்நாடு மக்களின் நிலைப்பாடு என்னவோ அதே தான் தனது நிலைப்பாடு என்று கூறிய டிடிவி தினகரன், ரிமோட் வாக்கு முறை குறித்து அதன் சாதக பாதகங்கள் பற்றியெல்லாம் வல்லுநர்களிடம் பேசிவிட்டு தான் பேச வேண்டுமே தவிர ஏனோ தானோ என்று பேசக்கூடாது எனவும் தெரிவித்தார். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இன்னும் வாக்குச்சீட்டு முறை தான் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பழனிசாமியால் பலவீனம்
ஆட்சி அதிகாரம் கையில் இருந்த போது எடப்பாடி பழனிசாமியை ராஜதந்திரி என்று புகழ்ந்தவர்களே இப்போது அவர் செய்தது நம்பிக்கை துரோகம் என கூற ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் அதிகாரம் இருந்தால் குப்பனும் சுப்பனும் கூட ஒரு ஆட்சியை நடத்திவிட முடியும் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அவர் எந்தக் காலத்திலும் தலைவர் ஆகிவிட முடியாது என்றும் பழனிசாமியால் அதிமுக பலவீனம் அடைந்து வருவதாகவும் விமர்சித்திருக்கிறர்.

காயத்ரி ரகுராம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக காய்த்ரி ரகுராம் அண்ணாமலைக்கு சவால் விடுத்தது பற்றிய கேள்விக்கு இதனை அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் எனக் கூறி நழுவிக்கொண்டார் டிடிவி தினகரன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications