கூட்ட நெரிசல் மேலாண்மை ஸ்பெஷலிஸ்ட்! மனித உரிமை ஆர்வலர்! புஸ்ஸியிடம் கறார் காட்டிய ஈஷா சிங்! யார்?
புதுச்சேரி: விஜய் தலைமையில் தவெக பொதுக் கூட்டம் நடைபெற்ற போது கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் விஜய் பொதுக் கூட்டம் நடத்தினார். அப்போது விஜய்யை பார்க்க முண்டியடித்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகிவிட்டனர். சுமார் 73 நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பொதுவெளியில் கலந்து கொள்ளாமல் இருந்தார் விஜய்.

இந்த நிலையில் தமிழக, புதுவை சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில் புதுவையில் பொதுக் கூட்டம் நடத்த விஜய் முடிவு செய்து அதற்காக அனுமதி கோரிய நிலையில் முதல் முறையாக யூனியன் பிரதேசமான புதுவையில் தவெக பொதுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த நிலையில் காலை முதலே புதுவை உப்பளம் துறைமுகம் அருகே தொண்டர்கள் திரள தொடங்கினர்.
ஒரு பாஸுக்கு 2 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என கட்சி சார்பில் கூறப்பட்ட நிலையில் ஒரு டோக்கனுக்கு ஒருவரை மட்டும் போலீஸார் அனுமதித்ததால் அங்கு சலசலப்பு எழுந்தது. இதனால் தொண்டர்கள் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் தங்கள் முகங்களை மூடிக் கொண்டு உள்ளே வர முண்டியடித்தனர். அப்போது பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கட்டுக்கடங்காமல் குவிந்த தொண்டர்கள் உள்ளே புகுந்தனர்.
ஒரே நேரத்தில் அங்கிருந்த கேட்டில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. அவர்களை போலீஸார் ஒழுங்குப்படுத்தி ஒவ்வொருவராக அனுமதித்தனர். இந்த நிலையில் சிலரை கியூஆர் கோடு இல்லாமலேயே புஸ்ஸி ஆனந்த் உள்ளே வர அனுமதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்போது தவெக நிர்வாகி ஒருவர் "அங்குள்ள அனைவரையும் உள்ளே விடுங்கள்" என தெரிவித்ததால் அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரி கோபமடைந்து, அனுமதி இல்லாமல் உள்ளே நுழைய முயன்றவர்களை தடுத்து நிறுத்தினார். அப்போது அங்கு வந்த புஸ்ஸி ஆனந்த், பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே விடுங்கள்" என சொல்ல, உடனே புதுவை எஸ்பி ஈஷா சிங் ஐபிஎஸ், "நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்கிறீர்களா, 40 பேர் இறந்திருக்கிறார்கள்" என ஆவேசமாக தெரிவித்தார்.
அவர் மேலும், "கரூரில் 41 பேர் இறந்திருக்கிறார்கள். மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு" என கண்டித்தார். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு எழுந்தது.
யார் இந்த ஈஷா சிங்
ஈஷா சிங், மும்பையை சேர்ந்தவர். இவர் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐபிஎஸ்ஸாக தேர்ச்சி பெற்றார். 2014 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். கல்வி மேம்பாட்டிலும் நிர்வாகத் திறமையிலும் சிறந்தவர். இவர் டெல்லி, அருணாசல பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பொறுப்புகளில் வகித்துள்ளார்.
பெண் பாதுகாப்பு
குற்றத் தடுப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, பெண்கள் பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிலும் தனது திறமையை காட்டினார். புதுவை எஸ்பியாக நியமிக்கப்பட்ட ஈஷா , பொதுக் கூட்டங்கள், அரசியல் நிகழ்வுகள், கூட்ட நெரிசல் உள்ளிட்டவைகளில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளார்.
விதிகளை மீறினால் அவர் அதை சகித்துக் கொள்ள மாட்டார். பெண்கள் பாதுகாப்பு, இரவு ரோந்துப் பணிகள், சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் முன்னோடியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
யார் மகள்
இவர் வேறு யாருமில்லை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி யோகேஷ் பிரதாப் சிங்கின் (ஒய்.பி. சிங்) மகளாவார். முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாதெமியில் யுபிஎஸ்சிக்காக படித்தார். ஒய்.பி. சிங், ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து ஐபிஎஸ் பதவியில் இருந்து விலகினார்.
தாயும் ஐபிஎஸ்
ஈஷாவின் தாய் அபா சிங்கும் இந்திய தபால் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர். பின்னர் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதற்காக அவர் தனது தபால் பணியில் இருந்து விலகினார். தற்போது பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
சாதனை
ஈஷாவும் பெங்களூரில் 2018 ஆம் ஆண்டு சட்டம் படித்தார். தற்போது பொது நல வழக்குகளில் வழக்கறிஞராக வாதாடி வருகிறார். செப்டிக் டேங்க் சுத்தப்படுத்தும் பணியில் இறந்த ஊழியர்களின் மனைவிகளுக்கு தனது வாத திறமையால் வாதாடி ரூ 10 லட்சம் இழப்பீடு பெற்றுத் தந்தார். ஒரு அதிகாரியால் போலியாக ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பெண்ணுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்தார் ஈஷா சிங். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் நீதியை நிலைநாட்டும் வகையில் ஈஷா செயல்பட்டு வருகிறார்.
-
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications