செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது!
சேலம்: சேலத்தில் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். 50க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண் வன்கொடுமை, ஏமாற்றுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகில் உள்ள புத்தூர் அக்ரஹாரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 40 வயதான மணிகண்டன். தவெக ஒன்றிய நிர்வாகியான மணிகண்டன், வீட்டின் அருகில் கடை நடத்தி வரும் நிலையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்த விவகாரத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பண நெருக்கடியில் ஆதரவின்றி தவிக்கும் பெண்களை குறி வைத்து பழகும் மணிகண்டன், அந்த பெண்களுக்கு கடன் உதவிகளை செய்து கொடுப்பதைப் போல ஏமாற்றி தவறான எண்ணத்தில் நெருங்கி பழகி வந்திருக்கிறார். அந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதுடன் அதை வைத்தே பாலியல் இச்சைகளை நிறைவேற்றி வந்திருக்கிறார்.
மேலும், சம்மந்தப்பட்ட பெண்களின் வீடியோவை காட்டி மிரட்டி அவரது நண்பர்களின் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி உள்ளார். மேலும் சில பெண்களை பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மணிகண்டனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளியிட்ட ஆடியோ ஒன்று இணையத்தில் பரவியது. "நெய்க்காரப்பட்டியை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர், எனக்கு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி கொடுத்து உதவி செய்தார். இதன் மூலம் அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்தோம். இந்த நிலையில் அவரது செல்போனை பார்த்த போது, அதில் பல பெண்களின் ஆபாச வீடியோ இருந்ததை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
உடனடியாக நான், என்னுடைய வீடியோக்களை அழித்து விட்டேன். அதன்பிறகு அவருடன் பழகுவதை நிறுத்தி கொண்டேன். இதனால் சந்தேகமடைந்த அவர் எனக்கு போன் செய்து, உன்னுடைய ஆபாச வீடியோ என்னிடம் உள்ளதால் நான் கூப்பிடும் போது நீ வர வேண்டும் என்று மிரட்டி வருகிறார். என்னை போல் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மணிகண்டனின் செல்போனை ஆய்வு செய்த காவல்துறையினர், 30 பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்திருப்பதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு!












Click it and Unblock the Notifications