கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி
சென்னை: பாஜகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி விலகி, தவெகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜயதரணி பாஜகவில் இணைந்தார். ஆனால் பாஜகவில் இணைந்த நாள் முதலே விஜயதரணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. எந்தவித கட்சிப் பொறுப்பும் அளிக்காததால் அதிருப்தியில் இருந்து வந்த விஜயதரணி, தற்போது தவெகவில் இணைந்திருக்கிறார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு விஜயதரணி வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி, கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் தனது எம்.எல்.ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார்.

டெல்லிக்குச் சென்று பாஜகவின் தேசியத் தலைவர்கள் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இவர் விலகியதால் விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. காங்கிரஸின் முக்கிய பெண் முகமாக இருந்த விஜயதரணி, தனது எம்.எல்.ஏ பதவியைத் தூக்கி எறிந்துவிட்டுப் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பாஜகவில் இணைந்தார்.
ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக, பாஜகவில் இணைந்த நாள் முதலே அவருக்குக் கட்சியில் எந்தவொரு முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எதிலுமே அவருக்குப் போட்டியிட வாய்ப்போ அல்லது மாநில அளவில் எந்தவொரு முக்கியக் கட்சிப் பொறுப்போ வழங்கப்படவில்லை.
2011 முதல் 2024 வரை விளவங்கோடு எம்எல்ஏ-வாக இருந்தார். லோக்சபா தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து பாஜகவில் ஐக்கியமானவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2026 சட்டசபைத் தேர்தலில் விளவங்கோடு தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் விஜயதரணி பனையூர் அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து தவெகவில் இணைந்திருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தவெக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பதோடு, விஜயதரணியும் இணைந்திருக்கிறார். இதனால் வரும் நாட்களில் தவெக கன்னியாகுமரியில் மிகப்பெரிய செல்வாக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications