விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விளவங்கோடு தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ். விஜயதரணி, காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு சென்று, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன... விஜயதரணி இந்த முடிவுக்கு வர என்ன காரணம்? அவரது இந்த இணைப்பு தவெகவுக்கு எந்த அளவுக்கு பலனுள்ளதாக இருக்கும்? விஜயதாரணிக்கே இந்த முடிவு சாதகமான ரிசல்ட்டை அவருக்கு பெற்று தருமா?

கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இருந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ். விஜயதரணி.. நீண்ட காலமாகவே காங்கிரஸ் கட்சியில் மாநில மற்றும் அகில இந்திய அளவிலான முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தவர், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திடீரென பாஜகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரிய விவாதத்தைக் கிளப்பியது.

Vijayadharani Vilavancode MLA Tamilaga Vettri Kazhagam TVK Vijay Congress BJP Tamil Nadu Politics Kanyakumari

காங்கிரஸ் மீது கோபம்

காங்கிரஸில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை, வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்ற கடுமையான விமர்சனத்தோடு, முத்தலாக் விடுதலை மற்றும் பெண்களுக்கான சொத்துரிமை போன்ற பாஜகவின் திட்டங்களைப் பாராட்டி, அங்கே தாமரை மலரச் சென்றார்.

ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாததால் சில காலம் பதவியின்றி பாஜகவில் இருந்து வந்தார். அதேசமயம் எப்படியும் பாஜகவில் சீட் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்து கிடந்தார்.

பாஜகவில் சீட்

அதன்படியே பாஜக வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றதால் அவரது ஆதரவாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தனது தனிப்பட்ட செல்வாக்கும், பா.ஜ.க-வின் வாக்கு வங்கியும் இணைந்து தன்னை மீண்டும் அரியணையில் ஏற்றும் என அவர் மலைபோல நம்பியிருந்தார்.

ஆனால், காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் விளவங்கோட்டில், சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி களம் கண்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் அபார வெற்றி பெற்றார். விஜயதரணிக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தையே தந்தன.

கட்சி தாவல்கள்

இந்தத் தோல்விக்குப் பிறகு, தற்போது விஜயதரணி, தவெகவில் இணையப்போவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் புதிய அதிர்வலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

ஒருவர் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து முரணான கொள்கைகளைக் கொண்ட கட்சிகளை மாற்றும்போது மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பகத்தன்மை குறைவது இயல்பான ஒன்றுதான்... "கொள்கைக்காகவா அல்லது அதிகாரத்திற்கா?" என்ற கேள்வியை வாக்காளர்கள் எழுப்பத் தொடங்குவார்கள் என்பதால், இந்தத் தொடர் கட்சித் தாவல்கள் விஜயதரணியின் தனிப்பட்ட அரசியல் இமேஜை பொதுவெளியில் கண்டிப்பாக பலவீனப்படுத்தக்கூடும் என்றே கருதப்படுகிறது.

விளவங்கோடு விஜயதரணி

அதேசமயம், விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி தோற்றிருந்தாலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரளவிற்கு வாக்கு வங்கியைத் தக்கவைத்திருந்த ஒரு பெண் முகத்தை பா.ஜ.க இழப்பது அக்கட்சிக்கு நிஜமாகவே ஒரு மைனஸ் பாயிண்ட் தான்.

தமிழகத்தில் தடம் பதிக்கப் போராடும் பா.ஜ.க-விற்கு, ஏற்கனவே அண்ணாமலை விலகலும், அவரை பின்தொடர்ந்து ஏராளமான பாஜக பிரபலங்களும் வெளியேறி வருகிறார்கள்.. இப்போது இந்த லிஸ்டில் விஜயதரணியும் சேர்ந்துள்ளார்.

ஓரளவாவது அறியப்பட்ட முகங்கள் கட்சியை விட்டு வெளியேறுவது தற்காலிக சுணக்கத்தை நிச்சயம் பாஜகவுக்கு ஏற்படுத்தவே செய்யும்..

தவெக இணைப்பு பலன் தருமா

தற்போது தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணியில் இருக்கும் சூழலில், விஜயதரணி அதே கட்சியில் இணைந்தால் அது ஒரு மாறுபட்ட அரசியல் சூழலை உருவாக்கும். நேற்று வரை விஜயதரணியை விமர்சித்த காங்கிரஸாரும், காங்கிரஸை விமர்சித்த விஜயதரணியும் இப்போது ஒரே கூட்டணியின் நிழலில் பயணிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும்.

இது உள்ளூர் மட்டத்திலான கூட்டணி இணக்கத்திற்கு சிறிய சலசலப்புகளைத் தந்தாலும், புதிய கட்சியான தவெகவிற்கு பாரம்பரிய அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்.

3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற நடைமுறை அனுபவங்கள், குமரி மாவட்ட செல்வாக்கு ஆகியவை தவெக தங்களது கட்சிக் கட்டமைப்பை அடிமட்ட அளவில் பலப்படுத்த கண்டிப்பாக உதவக்கூடும்.. குமரியில் பெரிதாக ஆளுமை மிக்க பெண் முகம் பெரிதாக இல்லாத சூழலில் தவெகவும் சரியாகவே அவரை பயன்படுத்தி கொள்ளும் என தெரிகிறது.. ஆக மொத்தம் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதற்கு விஜயதரணியின் இந்த அடுத்தகட்ட நகர்வே சாட்சி.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+