திடீர் தொப்பி ஏன்? மத்திய இணையமைச்சர் எல் முருகன் சிரித்தபடி சொன்ன பதில்! பின்னணி
புதுச்சேரி: கடந்த சில நாட்களாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் தலையில் தொப்பி அணிந்துள்ளார். இதன் பின்னணி பற்றி பலருக்கும் தெரியாத நிலையில் இன்றைய தினம் பத்திரிகையாளர்கள் அதுபற்றி கேள்வி கேட்டனர். அதற்கு எல் முருகன் சொன்ன பதிலால் குழப்பம் தீர்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் எல் முருகன் மத்திய இணையமைச்சராக உள்ளார். இவர் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, நாடாளுமன்ற விவகாரத்துறையை நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் தான் புதுச்சேரி வர்த்தக சபையில் வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் இன்று எல் முருகன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் வணிகர்களின் குறைகளை எல் முருகன் கேட்டறிந்தார்.
இந்த மீட்டிங்கிற்கு பிறகு எல் முருகன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சிவப்பு நிறத்தில் தலையில் தொப்பி அணிந்திருந்தார். இந்த மாதத்தின் தொடக்கம் முதலே அவர் தனது தொப்பில் அணிந்திருந்தார். மதுரைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தபோதும் எல் முருகன் தொப்பி அணிந்தே அவரை வரவேற்றார். மேலும் அவர் பொதுவெளியில் தொப்பியை கழற்றவே இல்லை.
இந்நிலையில் தான் புதுச்சேரியில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில் நிருபர் ஒருவர், ‛‛சில நாட்களாக தொப்பி அணிந்துள்ளீர்கள். அது ஏன்? என்று கேள்வி கேட்டார். அதனை கேட்டவுடன் எல் முருகன் உள்பட மேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர். அதோடு எல் முருகன் சிரித்தபடி, ‛‛ இந்த கேள்வியை தனியாக டே்டு இருக்கலாம்'' என்று முதலில் கூறினார். அதன்பிறகு ‛‛கோவிலுக்கு போய் மொட்டையடித்து உள்ளேன். அதனால் தொப்பி அணிந்துள்ளேன்'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து அந்த நிருபர், ‛‛எவ்வளவோ தொப்பி உள்ளது. ஆனால் இந்த தொப்பி அணிய என்ன காரணம்?'' என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எல் முருகன், ‛‛உங்களை போல் ஒரு நண்பர் கொடுத்தார். அதனால் அணிந்துள்ளேன்'' என்று கூறி சிரித்தபடி சென்றார். எல் முருகன் அணிந்திருந்த தொப்பி என்பது இஸ்லாமியர்கள் அணிவது போலவும், இமாச்சல பிரதேச மக்கள் பயன்படுத்தும் தொப்பி போலவும் இருந்தது. இதனால் அந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எல் முருகன், ‛‛நண்பர் கொடுத்ததால் அணிந்துள்ளேன்' என்று தெரிவித்து விட்டு சென்றார்.
முன்னதாக இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் பற்றி எல் முருகன் விளக்கம் அளித்தார். மேலும் அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுபற்றிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அப்போது திமுக கூட்டணியில் திருமாவளவன் இருப்பாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுபற்றி எல் முருகன், ‛‛2026 சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க தேசிய ஜனநாயக கூட்டணி பெறப்போகிறது. திருமாவளவன் இருக்கும் கூட்டணி (திமுக கூட்டணி) சலசலப்பாகி உள்ளது. அவரே (திருமாவளவன்) அந்த கூட்டணியில் இருப்பாரா? என்பது தெரியவில்லை. அவர் இரண்டு மனநிலையில் உள்ளார்.
இந்த கூட்டணியில் இருக்கலாமா? வேறு கூட்டணிக்கு செல்லலாமா? என்று நினைக்கிறார். ஏனென்றால் ‛இந்தியா' கூட்டணி மிகப்பெரிய தோல்வியடையும் என்பது அவருக்கு (திருமாவளவன்) தெரியும். இதனால் இப்போதைய கூட்டணியில் தொடரலாமா? வேறு கூட்டணி செல்லலாமா? என்ற தடுமாற்றத்தில் அவர் உள்ளார்'' என்று கூறியுள்ளார்.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்











Click it and Unblock the Notifications