எப்பப் பார்த்தாலும் ஆம்பளை சகவாசம்.. விடிய விடிய சாட்டிங்... தாயை குத்திக் கொன்ற மகன்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பல ஆண்களுடன் தொடர்பு.. தாயை குத்திக்குக் கொன்ற மகன்- வீடியோ

    புதுச்சேரி: புதுச்சேரியில் எப்போது பார்த்தாலும் ஆண்களுடன் தொடர்பு வைத்துக கொண்டு போனிலேயே சாட் செய்து வந்த தாயை குத்திக் கொன்ற மகன், பிணத்துடன் 7 நாள் வசித்து வந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் ஜெயசேகரன். இவரது இரண்டாவது மனைவி ஜெயமேரி (வயது 51). இவர்களுக்கு அமலோற்பவநாதன்(28) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் கணவருன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். கணவர் ஜெயசேகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற மகன் அமலோற்பவநாதன் அங்கிருந்த போலீசாரிடம் தனது தாயை கடந்த 5 ந் தேதி கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டதாகவும், வீட்டின் அறைக்குள் அவரது பிணத்தை வைத்து பூட்டி வைத்து இருப்பதாகவும் கூறினார். 7 நாட்கள் அதே வீட்டில் தானும் வசித்து வந்ததாக கூறினார்.

    அழுகிய உடல்

    அழுகிய உடல்

    இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் நடைபெற்ற இடம் லாஸ்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் போலீசார் அவரை லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைதொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று அழுகிய நிலையிலிருந்த ஜெயமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தாயின் தொடர்புகள்

    தாயின் தொடர்புகள்

    இந்த கொலை தொடர்பாக அமலோற்பவநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜெயமேரிக்கு பல்வேறு வாலிபர்களுடன் கள்ள தொடர்பு இருந்ததாகவும், அவர் வாலிபர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளதாகவும், அதனை பார்த்த அமலோற்பவநாதன் தாயாரை கண்டித்துள்ளார்.

    அதிகாலையில் அரைகுறை உடையுடன்

    அதிகாலையில் அரைகுறை உடையுடன்

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை ஜெயமேரி செல்போனில் வீடியோ காலிங் மூலம் அரைகுறை ஆடையுடன் சில வாலிபர்களுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்த அமலோற்பவநாதன் தாயை மீண்டும் கண்டித்துள்ளார்.

    இப்படித்தான் இருப்பேன்

    இப்படித்தான் இருப்பேன்

    அப்போது நான் அப்படித்தான் இருப்பேன் என்று ஜெயமேரி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அருகில் இருந்த நாற்காலியை எடுத்து தாயை தாக்கியுள்ளார். இதில் ஜெயமேரி மயங்கி விழுந்தார். உடனே அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஜெயமேரியின் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார்.

    பிரேதத்துடன் வாசம்

    பிரேதத்துடன் வாசம்

    பின்னர் அவரது உடலை அறையிலேயே வைத்து பூட்டி விட்டு, தானும் அதே வீட்டில் 7 நாட்களும் பிரேதத்துடன் தங்கியுள்ளார். ஒருகட்டத்தில் குற்ற உணர்வு ஏற்பட்டு அமலோற்பவநாதன் போலீசில் சரணடைந்துள்ளார். இதனையடுத்து அமலோற்பவநாதன் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+