கட்டிய மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்.. கதறி அழுது டிராமா போட்ட கொடுமை!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் சபாநாயகர் வைத்தியலிங்கம் வீட்டுக்கு அருகே காலையில் பால் வாங்கப் போன பெண் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரே கொலை செய்தது தெரிய வந்து போலீஸார் அவரையும், அவருக்கு உதவியாக இருந்த கும்பலையும் கூண்டோடு கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி அருகே மடுகரை கிராமத்தில் கங்கா ( 27) என்ற பெண் தனது இரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை தனது வீட்டில் இருந்து வெளியேவந்த கங்கா, அருகில் உள்ள கடையில் பால் வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பிகொண்டிருந்தபோது, சபாநாயகர் வைத்தியலிங்கத்தின் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கங்காவின் கழுத்தை அறிவாளால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்தனர். சபாநாயகர் வீட்டின் அருகே நடைபெற்ற இந்த துணிகர கொலை சம்பவம் புதுச்சேரியில் மிகுந்த பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

young girl murder 9 accused arrest

கொலையுண்ட கங்கா, ராஜு என்கிற ராஜசேகர் என்பவரை எட்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டு தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கங்கா புதுச்சேரி மாநிலம் மடுகரை கிராமத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தனது இரண்டு ஆண் குழந்தைகளுடன் வசித்து கொண்டு, அருகில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கங்காவுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்தாலும், கங்காவின் கணவரான ராஜசேகர் அடிக்கடி கங்காவின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். கங்காவின் வீட்டிற்கு சென்று வரும்போதெல்லாம் இருவருக்கும் இடையே சண்டை இருந்து வந்துள்ளதாக கூறப்பட்டது.

இதனால் ராஜசேகர் தனது மனைவியை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தன்னை விட்டு தனியாக வசித்தி வந்த மனைவி கங்காவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, ஆத்திரத்தில் கூலிப்படை வைத்து கொலை செய்ததை ராஜசேகர் ஒப்புக்கொண்டார்.

young girl murder 9 accused arrest

இதனைத்தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகர், சுகுமார், குணசீலன், கதிர், ரஞ்சித், ஜெகன், அருள் பிரகாஷ், ஐயப்பன் உள்ளிட்ட 8 பேரை வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்திய கத்தி, செல்போன்கள், இருசக்கர வாகனம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பின்னர் 9 பேரையும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

young girl murder 9 accused arrest

மேலும் கொலை நடந்த அன்று ராஜசேகர் கங்காவின் வீட்டில் தனது இரு குழந்தைகளுடன் படுத்து தூங்கியுள்ளார். கங்கா கொலை செய்யப்பட்ட தகவல் தெரிவிந்தவுடன், ஒன்று தெரியாததுபோல் கங்கா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு வந்து கதறி அழுது நாடகமாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+