பெண்ணை.. நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம்.. பெட் கட்டிய இளைஞன்.. கைது செய்து லாடம் கட்டிய போலீஸ்

இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் தந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பெண்ணை நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம். கைது செய்த போலீஸ்-வீடியோ

    புதுச்சேரி: எது எதுக்கு பந்தயம் கட்டறதுன்னு ஒரு வெவஸ்தை வேணாமா.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து காட்டுகிறேன் பார்.. என்று 'பெட்' கட்டி அதன்படியே ரோட்டில் போய்க் கொண்டிருந்த பெண்ணை இழுத்து பிடித்து முத்தம் தந்துள்ளார் ஒரு போதை இளைஞர்! அதுவும் அவர் ஒரு பெண் அதிகாரி என்பது கூடுதல் ஷாக்! இப்போது அந்த இளைஞர் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

    புதுச்சேரியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் 23 வயது பெண். மும்பையை சேர்ந்தவர். தனியார் நிறுவனம் ஒன்றில் வர்த்தக மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று, நைட் டியூட்டி முடித்துவிட்டு, வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னாடியே 2 இளைஞர்கள் பைக்கில் வந்துள்ளனர். இதை இந்த பெண் ரொம்ப நேரமாக கவனிக்கவில்லை.

    முத்தம்

    முத்தம்

    வீடு இருக்கும் தெருவுக்குள் அந்த பெண் நுழைந்துவிட்டார். உடனே பைக்கை தெருமுனையிலேயே இளைஞர்கள் நிறுத்தி விட்டனர். அதில் இருந்து ஒருவர் இறங்கி ஓடிச்சென்று திடீரென பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டு ஓடிவிட்டார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த பெண், அலறி கத்தினார். ஆனால் அந்த நேரத்தில் தெருவில் யாருமே இல்லை. அதற்குள் பைக்கில் 2 பேரும் தப்பிவிட்டனர்.

    கிரண்பேடி

    கிரண்பேடி

    இதையடுத்து, அந்த பெண் உடனடியாக ஸ்டேஷனில் புகார் அளித்தார். அத்துடன் விடவில்லை, ஆளுநர் கிரண்பேடிக்கு வாட்ஸ்அப் மூலம் புகாரை அனுப்பினார். ஆனால் இதில் சிறப்பு என்னவென்றால், அந்த புகாரை அப்போதே படித்துள்ளார் கிரண்பேடி. உடனடியாக, போலீசாருக்கு கிரண்பேடி அதிரடி உத்தரவிட்டதன் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவிக்களை ஆய்வு செய்தனர்.

    மொட்டத்தோப்பு ரிஷி

    மொட்டத்தோப்பு ரிஷி

    அப்போது முத்தம் கொடுத்த இளைஞரை பெண் சொல்லிய அடையாளம் வைத்து, கொஞ்ச நேரத்தில் பிடித்துவிட்டனர். அவருக்கு வயசு 19 தான் ஆகிறது.. பெயர், மொட்டத்தோப்பு ரிஷி என்பதாம். உடன் வந்த நண்பனுக்கு வயசு 17 ஆகிறதாம். மொட்டத்தோப்பு ரிஷியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், "நானும் என் ஃபிரண்டும், தண்ணி அடிச்சிட்டு பைக்கில் வந்துட்டு இருந்தோம்.

    பந்தயம்

    பந்தயம்

    அப்போதான், பெண்ணை பார்த்தோம். என் நண்பன் என்னிடம், 'அந்த பெண்ணைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க முடியுமா' என்று பந்தயம் கட்டினார். நானும், "முத்தம் கொடுத்து, சவாலில் ஜெயித்து காட்டுகிறேன்" என்று சொல்லி, அதன்படியே செய்தேன் என்றார்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இந்த விவகாரத்தில் 2 விஷயங்கள் பாராட்டத்தக்கது. ஒன்று, சம்பந்தப்பட்ட பெண் இதையெல்லாம் சின்ன விஷயமாகவோ, அல்லது வெளியில் சொன்னால் மானம் போய்விடும் என்று நினைத்து, பயந்து ஒதுங்கிவிடாமல், துணிச்சலுடன் உடனே போலீசாருக்கு புகார் சொல்லியதுதான். அடுத்ததாக, ஆளுநர் கிரண்பேடி அந்த சமயத்தில் வாட்ஸ்அப் மெசேஜ்-ஐ படித்ததுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளதுதான்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+