குடிப்பதற்கு பணம் தராததால் ஏடிஎம்மை உடைத்த இளைஞர்.. தேடி வந்த போலீஸ்.. பரபர சம்பவம்
புதுச்சேரி : குடிப்பதற்கு தாய் பணம் தராததால் ஏடிஎம் இயந்திரங்களை சுத்தியலால் சேதப்படுத்திய பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தில் 2 ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு வந்த வாலிபர் ஒருவர், தான் மறைத்து வைத்து எடுத்து வந்த சுத்தியலை கொண்டு அங்கிருந்த இரண்டு ஏடிஎம் இயந்திரங்களின் மானிட்டர்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இயந்திரம் உடைக்கும் போது எஸ்பிஐ வங்கிக்கு எச்சரிக்கை மணி ஒலித்ததை அடுத்து எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்தனர்.

பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் வங்கியின் மேலாளர் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த இளைஞரை, ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பிள்ளைத்தோட்டம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்தி என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். மேலும் தான் மாட்டிக் கொள்வோம் என்று உணர்ந்த கார்த்திக் நீதிமன்றத்தில் சரணடைய சென்றபோது. உருளையன்பேட்டை போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும் தெரிவித்துள்ளார்.
குடிப்பதற்கு தனது தாயிடம் பணம் கேட்டு தர மறுத்ததால் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்துக்கொண்டு ஏடிஎம் மையத்திற்கு சென்று உடைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் பணம் எடுக்க முடியாது என்று தெரிந்ததை அடுத்து உடனே அங்கிருந்து திரும்பி சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்தார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
குடிப்பதற்கு தாயிடம் பணம் கேட்டு தராததால் ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சுத்தியால் உடைத்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications