என்னா ஒரு புத்திசாலித்தனம்.. திமுக எம்எல்ஏ பாரில் நூதன முறையில் மதுபானம் திருட்டு!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சீல் வைக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏவின் மதுபானக்கடையின் எக்ஸாஸ்ட் பேன் அருகேயுள்ள துளை வழியாக நுழைந்து அங்கிருந்து மதுபாட்டில்களை இளைஞர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 469 மதுபானக் கடைகள் மற்றும் 98 சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் உள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதையொட்டி, அனைத்து மதுபானக் கடைகள், குடோன்கள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் கள்ளச்சந்தையில் தொடர்ந்து மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக, தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, மதுபானக் கடைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. எனினும் தொடர்ந்து மதுவிற்பனை நடந்ததாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, ஊரங்கின்போது மதுக்கடைகளில் இருந்த மதுபானங்களின் எண்ணிக்கையை சரிபார்க்க ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டன. கணக்கு சரியில்லாத 89 மதுக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் மதுபானம் இருப்பு குறித்து மதுக்கடைக்கு ஆய்வுக்கு சென்ற தாசில்தார் கார்த்திகேயன் மதுபாட்டில்கள் எடுத்துச் சென்றதாகக் கைதானார். அவருடன் அரசு அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 8 பேர் கைதானார்கள். பல போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் சீல் வைக்கப்பட்டிருந்த மதுபானக்கடையின், காற்று வெளியேற்றும் எக்சாஸ்ட் பேன் துளை வழியாக சென்று இளைஞர்கள் மதுபானம் திருடியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியகடை காவல்நிலைய போலீசார், ரெங்கபிள்ளை வீதியில் ரோந்து சென்றபோது சந்தேகபடும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம் மது பாட்டில்கள் இருந்தது. உடனே அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், குடிக்க மது இல்லாத காரணத்தால், ரெங்கபிள்ளை வீதியில் உள்ள திமுக எம்எல்ஏ சிவாவுக்கு சொந்தமான மதுபானகடையின், காற்று வெளியேற்றும் எக்சாஸ்ட் பேன் துளை மூலம் உள்ளே சென்று மதுபாட்டில்களை திருடியாதாக ஒப்பு கொண்டுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட விஜய்(21), தினேஷ்(28) ஆகியோரை போலீசார் கைது செய்து திருடிய மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications