குளிக்க சென்ற 3 சிறுவர்கள்.. நீரில் மூழ்கி அண்ணன்- தம்பி பலி.. புதுக்கோட்டையில் சோகம்
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே மூன்று சிறுவர்கள் குளிக்க சென்ற நிலையில் அண்ணன் தம்பி இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாத்தூர் அருகேயுள்ள ஆவூரை சேர்ந்தவர் சபரி. இவரது மகன் சந்தோஷ்(12). திருநெல்வேலியை சேர்ந்த ஜீவன்ராஜ் என்பவர் ஆவூரில் குடும்பத்துடன் தங்கி பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன்கள் ஜாக்சன்(12), ஜான்சன்((9).

இந்நிலையில் இன்று மதியம் சந்தோஷ், ஜாக்சன், ஜான்சன் ஆகிய 3 பேரும் அங்குள்ள பெரிய குளத்திற்கு குளிக்க சென்றனர். அப்போது நீச்சல் தெரியாத அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர்.
அருகில் இருந்தவர்கள் இதைக் கண்டு குளத்தில் இறங்கி அவர்களை மீட்க முயன்றனர். இதில் ஜாக்சனும், ஜான்சனும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை பொதுமக்கள் மீட்டனர்.
சிறுவன் சந்தோஷ் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். சிறுவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications