போலீஸ் முன்பே.. 4 பெண்கள் திடீர் தற்கொலை முயற்சி.. பின்னணியில் ஷாக் காரணம்.. பரபரத்த புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தின் முன்பு 4 பெண்கள் திடீரென விஷம் குடிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு பெண் போலீஸ் முன்பே 4 பெண்கள் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றனர். விஷப்பாட்டீல் பறிமுதல் செய்யப்பட்டநிலையில் அவர்கள் 4 பேரும் ரோட்டில் உருண்டு உருண்டு வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கட்டுமாவடி பகுதியை சேர்ந்தவர் 25 வயது பெண். இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் நரியங்காடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 7 வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில் தான் தம்பதி பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் தனது கணவரை பிரிந்து கீரமங்கலத்தில் வசித்து வந்தார்.

டெலிவரி செய்பவருடன் பழக்கம்
இந்நிலையில் தான் கீரமங்கலம் அருகே உள்ள பனங்குளம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவருக்கும், கணவரை பிரிந்து வாழும் 25 வயது இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பரமேஸ்வரன் ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதையடுத்து பரமேஸ்வரன், அந்த இளம்பெண்ணுடன் சேர்ந்து வாழ தொடங்கியதாக கூறப்படுகிறது.

போலீசுக்கு போன மேட்டர்
இந்நிலையில் தனக்கு திருமணம் ஆனதையும், மகன் இருப்பதையும் இளம்பெண் மறைத்தது தெரியவந்தது. இதனால் பரமேஸ்வரனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் பரமேஸ்வரன்-இளம்பெண்ணை பிரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் அந்த இளம்பெண் சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் பரமேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையின்போது பரமேஸ்வரன், இளம்பெண்ணுடன் வாழ ஒப்புக்கொண்டுள்ளார்.

தாய், சகோதரிகள் தற்கொலை முயற்சி
இதனை பரமேஸ்வரனின் குடும்பத்தினர் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது தாய் மற்றும் 3 சகோதரிகள் போலீஸ் நிலையத்தின் வெளியே நின்ற வாகனத்தில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இந்த வேளையில் பெண் போலீசார் உடனடியாக ஓடிச்சென்று அவர்களிடம் இருந்த விஷப்பாட்டீலை பறித்தனர். இருப்பினும் ஒரு பெண் விஷத்தை குடித்துவிட்டார். மேலும் அவர்கள் 4 பேரும் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையம் முன்புள்ள ரோட்டில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தனர்.

மருத்துவமனையில் அனுமதி
இதற்கிடையே விஷம் குடித்த பெண் அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர்களிடம் இருந்து விஷப்பாட்டிலை பிடுங்கியபோது பெண் போலீஸ் ஒருவரின் கண் அருகே விஷம் பட்டது. இதனால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் இன்று கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications