நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராடணும் மதுரை எம்.பி கருத்துக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் மா.சு!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் ஆய்வு செய்தனர்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் 62 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாவது தவணை 20 சதவீத மக்களுக்கு போடப்பட்டுள்ளது. மூன்றாவது அலை வரக்கூடாது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு

நடவடிக்கை
இருப்பினும் மூன்றாவது அலை வந்தால் அதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. 70 சதவீதம் பேர் முதல் தவணை போட்டுக்கொண்டதால் மூன்றாவது அலை வந்தாலும் பாதிப்பு ஏற்படாது என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது 62 சதவீதம் பேர் முதல் தவணை தமிழகத்தை போட்டுக்கொண்டுள்ளனர். மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடும் பணி வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாமை மூலமாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒன்றரை கோடி தடுப்பூசி
அக்டோபர் மாதத்தில் ஒன்றரை கோடி தடுப்பூசி வரும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகம் தடுப்பூசி போடுவது மத்திய அரசு பாராட்டும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த மாதத்திற்கு மத்திய அரசு ஒரு கோடியே 23 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்குவதாக உறுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வருவது வழக்கம் சுகாதாரத்துறையோடு உள்ளாட்சித்துறை இணைந்து அதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் கொசுமருந்து அடிப்பது உள்ளிட்ட டெங்கு ஒழிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.

வெற்றி கிடைக்குமா
நிபா மற்றும் ஜிகா வைரஸை தடுப் பதற்காக மாநில எல்லையோரங்களில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். 13 மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி தொய்வு என்று கூறமுடியாது வேகமாக அந்த மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. நீட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் போட்டுள்ளது ராஜன் குழு பரிந்துரையின் அடிப்படை தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. போராட்டம் நடத்துவதால் பயனில்லை என்று கூறவில்லை. போராட்டம் நடத்துவதற்கு முன்பு போராட்டம் நடத்தினால் வெற்றி கிடைக்குமா என்பதை உணர்ந்து போராட வேண்டும் என்று தான் நான் கூறினேன்.

பணிநிரந்தரம்
மூன்று மாதத்திற்கு முன்பு கொரோனா ஒழிப்பு பணியில் தற்காலிக பணியாளர்களாக சேர்ந்தவர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.. ஏற்கனவே 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய முடியாத நிலையில் மூன்று மாதத்திற்கு முன்பாக பணியில் சேர்ந்தவர்கள் எவ்வாறு பணிநிரந்தரம் செய்ய முடியும்
என்றுதான் கூறினேன். அதனால்தான் இந்த போராட்டத்தை ஒரு சிலர் தூண்டி விடுகிறார்கள் என்று கூறினேன் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஏற்புடைய கருத்து
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ள கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அவர் கூறும் கருத்து ஏற்புடைய கருத்தும் கூட.. போராட்டம் நடத்துவதை யாரும் குறைகூற முடியாது. என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications