2024 லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இருந்திருந்தால் ஜெயிச்சுருப்போம்.. அமித்ஷா
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பேசிய அமித்ஷா, "கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக தனித்தனியாக நின்று போட்டியிட்டது. ஆனால் அதிமுக - பாஜகவின் மொத்த வாக்குகளை எண்ணி பார்த்தால் 26 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம் என கூறினார். மேலும் பேசிய அவர், ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி மலரும் என கூறினார்.
நயினார் நாகேந்திரனின் "தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்" என்ற பரப்புரை நிறைவு விழா புதுக்கோட்டை பள்ளத்திவயல் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இவ்வாறு பேசினார்.

திமுகவை விமர்சித்த அமித்ஷா
"தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்" என்ற பெயரில் மதுரையில் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி பிரசாரப் பயணத்தை தொடங்கினார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று நிறைவு விழாவாக புதுக்கோட்டையில் பாஜக கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமித்ஷா திமுவை கடுமையாக விமர்சித்து பேசினார். ஊழல் கட்சி என்றும், குடும்ப கட்சி எனவும் விமர்சனம் செய்தார். மேலும் அதிமுக பாஜக கூட்டணி குறித்தும் பேசியுள்ளார். அமித்ஷா பேசியதாவது:-
ஊழல் ஆட்சி என்றால் திமுக ஆட்சி தான்
ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி மலரும். முதலில் கருணாநிதி அவர்கள், அடுத்ததாக ஸ்டாலின்.. இப்போது உதயநிதி ஸ்டாலின்.. உதயநிதியை முதல்வர் ஆக்குவதுதான் ஸ்டாலினின் நோக்கமாக உள்ளது. ஸ்டாலின் அவர்களே உங்களின் கனவு நிறைவேறாது.
இன்னும் கொஞ்ச நாட்கள் பாருங்கள்.. அதிமுக - பாஜக கூட்டணியில் இன்னும் நிறைய கட்சிகள் கூட்டணியில் வரும். இந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தே தீரும். தமிழகத்தில் திமுகவை எப்பேற்பட்டாவது ஆட்சியில் இருந்து அகற்றுவோம். ஒட்டு மொத்தம் பாரதத்திலும் எங்கேயாவாது ஊழல் நிறைந்த கட்சி, ஊழல் ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி தான்.
அதிமுக பாஜக இணைந்து போட்டியிட்டது
தேர்தல் அறிக்கையிலே மிகக் குறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கும் ஒரு கட்சி என்றால் அது திமுக தான். தமிழ்நாட்டில் தாய்மார்கள், சகோதரிகளுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. தமிழ்நாடு அரசின் ஒரே நோக்கம் என்னவென்றால் உதயநிதியை முதல்வர் ஆக்குவதில் மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டின் மக்களிடம் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். திமுக குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நாம் உறுதியேற்போம்.
மக்களே இந்த முறை கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையப் போகிறது. அதிமுக பாஜக கூட்டணி வெற்றி கூட்டணி. 1998 ஆம் ஆண்டில் நாம் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட்டோம். 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் நாம் ஒன்றாக இணைந்து போட்டியிட்டோம். 2021 தேர்தலிலும் கூட நாம் இணைந்தே தேர்தலை சந்தித்தோம்.
26 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம்
2024 ஆம் ஆண்டில் நாம் தனித் தனியாக தான் தேர்தலை சந்தித்தோம். ஆனால் அதிமுக - பாஜக இரண்டு கட்சிகளின் மொத்தம் வாக்குகளை எண்ணி பார்த்தால், 26 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றிருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications