எகிறி அடித்த விஜயபாஸ்கர்.. அன்னவாசல் பேரூராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த சாலை பொன்னம்மாள் தேர்வு
அன்னவாசல் பேரூராட்சி தலைவராக பொன்னம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
புதுக்கோட்டை: அன்னவாசல் பேரூராட்சி தலைவராக அதிமுக வேட்பாளர் சாலை பொன்னம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அலுவலகத்தைச் சுற்றிலும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினரும், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினரும் திரண்ட நிலையில், இந்த தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று, பதவியேற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் இன்று நகர்மன்ற, பேரூராட்சி மன்ற தலைவர்களுக்கான தேர்தல் நடந்தது..!

புகார்கள்
இந்த மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகளும், 7 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் உள்ள அன்னவாசல் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டது... அதனால் அங்கு கவுன்சிலர்கள் கடத்தப்படலாம் என்று கடந்த சில நாட்களாகவே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி உள்ளிட்டோரிடம் புகார் மனு கொடுத்திருந்தார்.. மேலும், நீதிமன்றத்தையும் நாடி பாதுகாப்பு கேட்டு மனுவும் செய்திருந்தார்.

கவுன்சிலர்கள்
இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கெல்லாம் அதிமுகவைச் சேர்ந்த 9 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்... திமுகவைச் சேர்ந்த ஒருசில கவுன்சிலர்களும் உள்ளே சென்றனர். இதைத்தொடர்ந்து அலுவலகத்தைச் சுற்றிலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினரும், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினரும் திரண்டனர். 2 கட்சிகளைச் சேர்ந்தோரும் அராஜகத்தில் ஈடுபடுவதாக ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தடியடி
அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற திமுக - அதிமுக இடையே கடும் போட்டி என கூறப்படுகிறது. அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்துக்குள் கல்வீசப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.. மேலும், பேரூராட்சி அலுவலக வாசலில் வைக்கப்பட்ட பேரிகார்டுகளைக் கடந்து திமுகவினர் அலுவலகத்துக்குள் செல்ல திமுகவினர் முயற்சித்தனர். தேர்தலில் அதிமுகவினர் - திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் இரு தரப்பு மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

பொன்னம்மாள் வெற்றி
தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பெரும்பான்மையுடன் உள்ள நிலையில், தேர்தலை நடத்தவிடாமல் திமுகவினர் எதிர்ப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. கல்வீச்சு மற்றும் காவல்துறையின் தடியடியால் போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்...

அதிமுக வெற்றி
இதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுக சாலை பொன்னம்மாள் வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி 1வது வார்டு அதிமுக வேட்பாளர் சாலை. பொன்னம்மா 51 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒத்துழைப்பு
தொடர் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளிடம், தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியே தேர்தல் நடத்தப்படுவதாகவும் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.. தங்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில், 'உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான்












Click it and Unblock the Notifications