பொங்கலுக்கு புதுக்கோட்டை அருகே பீர் குடிக்கும் போட்டி.. வாந்தி மட்டும் எடுத்தால்.. மிரள வைத்த பேனர்
புதுக்கோட்டை: 10 பீர் குடித்தால் 5000 பரிசு வழங்கப்படும் என்றும், 9½ பீர் குடித்தால் இரண்டாம் பரிசு ரூ.4,024 வழங்கப்படும் என்று கூறி, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பீர் குடிக்கும் போட்டி குறித்து விளம்பர பேனர் வைத்துள்ளார்கள். பொங்கல்ப பண்டிகையை ஒட்டி இந்த பீர் குடிக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளததால் புதுக்கோட்டையில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது பொதுவாக கிராமங்களில் நான்கு நாட்கள் மிகப்பெரிய திருவிழா நடைபெறும். பொங்கல் அன்று பொங்கல் வைத்து சூரியனை வழிப்பட்டு புத்தாடை அணிந்து சொந்தபந்தங்களுடன் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதுவும் எப்படி, தெருவுக்கு தெரு விழா நடத்தி பொங்கல் பண்டிகைக்கு உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

பொங்கல் விழாவில் காணும் கிராம பகுதிகளில் பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்கு ஓட்டம், மியூசிக்கல் சேர், கிரிக்கெட், கபடி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப்பொங்கல் அன்றும் ஏராளமான போட்டிகளை மக்கள் நடத்துவார்கள். ஸ்பூனில் எழுமிச்சை கொண்டு செல்வது, நடனம், ஆடலும் பாடலும் என அமர்களமாக இருக்கும். போட்டிகளை பங்கேற்போருக்கு பரிசுகளை வழங்குவார்கள்.
மாட்டு பொங்கல் அன்றோ அல்லது அடுத்த நாளோ ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என பண்டிகை இருக்கும். காளைகளை அவிழ்த்துவிட்டு ஓடவிடுவார்கள். காணும் பொங்கல் அன்று உறவினர்களை போய் சந்தித்து மகிழ்வார்கள். சுற்றுலா தளங்களுக்கு சென்று மகிழ்வார்கள். உண்மையில் பொங்கல் பண்டிகையைப் போல் உற்சாகமாக அற்புதமான பண்டிகை வேறு எதுமே தமிழர்களுக்கு இல்லை என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக இருக்கும்.
பொங்கல் பண்டிகையின் போது புரோட்டா சாப்பிடும் போட்டி, சாப்பாடு போட்டி கூட சில இடங்களில் நடத்துவார்கள் ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வாணக்கன்காடு பகுதி இளைஞர்கள் சிலர் வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளனர். அந்த போட்டி விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது என்றாலும் சமூக வலைதளங்களில் இது பற்றி தான் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பேசி வருகிறார்கள்,
என்ன போட்டி: வருகிற 17-ந் தேதி காணும் பொங்கல் அன்று பீர் குடிக்கும் போட்டி நடத்துவதாக அறிவித்து பேனர் உள்ளனர். அதில் 10 பீர் குடித்தால் முதல் பரிசு ரூ.5,024, 9½ பீர் குடித்தால் இரண்டாம் பரிசு ரூ.4,024, 9 பீருக்கு ரூ.3,024 மூன்றாம் பரிசாகவும், 8 பீர் குடித்தால் ரூ.2,024 நான்காம் பரிசாகவும் என அறிவித்துள்ளார்கள்..
கறம்பக்குடி அருகே உள்ள வாணக்கன்காடு ஊராட்சி வாண்டான் விடுதி கிராம இளைஞர்கள் தான் இந்த பீர் குடிக்கும் போட்டி அறிவிப்பினை வெளியிட்டதாக கூறப்படுகிறது. பீர் குடிக்கும் போது வந்தி எடுத்தாலோ, உமட்டினாலோ போட்டியில் இருந்து நீக்கப்படுவார்களாம். பீர்க குடித்ததற்கு பணமும் கொடுத்துவிட்டு செல்ல வேண்டுமாம். இந்த பேனர் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் வரவேற்றும் கிண்டல் செய்தும் வருகிறார்கள். அதேநேரம் ஒருவர் 10 பீர் எல்லாம் குடிப்பது உடலுக்கு மட்டுமல்ல. உயிருக்கே ஆபத்தானது.. விளையாட்டு பேனர் வைத்தார்களோ, அல்லது இது நிஜமா என்பது தெரியவில்லை.. உண்மையில் இதுபோன்ற மதுபழக்கத்தை ஊக்குவிக்கும் சிந்தனைகள் ஆபத்தானது. தயவு செய்து மது பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம்.












Click it and Unblock the Notifications