சி. விஜயபாஸ்கரை விடாது விரட்டும் சொத்துக்குவிப்பு வழக்கு.. அக். 7ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு
புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டசபைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு இயக்குனரகம் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த 2011, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்நிலையில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 60 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளதுடன் அவர் மற்றும் அவரது மனைவியின் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரின் வீடு, அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தினர்.
திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவக்கல்லூரி அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி பல மாதங்களுக்குப் பிறகு விஜய பாஸ்கர் மீது 216 பக்கத்திலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார் விஜயபாஸ்கர். அப்போது ஆகஸ்ட் 29 ஆம் தேதி மீண்டும் அவரது மனைவியுடன் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டசபைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு இயக்குனரகம் பதிவு செய்த சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆஜராகினர். இதனையடுத்து அடுத்த விசாரணையை செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத்துறை வழங்கிய குற்றப்பத்திரிக்கை நகலில் பக்கங்கள் விடுபட்டதாக புகார் தெரிவித்தனர். இதனையடுத்து குற்றப்பத்திரிக்கையில் அனைத்து பக்கங்களின் நகல்களையும் வழங்க உத்தரவிட்ட புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications