என்னப்பா ஏன் கூட்டமா நிற்கறீங்க? மாணவர்கள் சொன்ன பதிலால் அதிர்ந்து மாஜி செய்த நெகிழ்ச்சி சம்பவம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே கபடி போட்டிக்கு சென்றுவிட்டு பேருந்துக்காக நீண்ட நேரமாக காத்திருந்த பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் தனது காரில் டிராப் செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி விஜயபாஸ்கர். கொரோனா காலத்தில் இரவு பகல் பாராமல் பணியாற்றினார். ஒவ்வொரு முறையும் பிரஸ் மீட் கொடுக்கும் போதெல்லாம் அவர் முகத்தில் தூக்கம் இல்லாததன் சோர்வு நன்றாகவே தெரியும்.

அந்த அளவுக்கு கொரோனாவை விரட்டுவதில் அவருடைய உழைப்பு இருந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் அவர் விராலிமலை தொகுதியில் மீண்டும் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இவர் எம்பிபிஸ் படித்துள்ளார்.
இவரது வீட்டில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவை ஒவ்வொரு முறையும் வெற்றியை தேடி தரும். அந்த வகையில் அண்மையில் விஜயபாஸ்கர் வளர்த்த கருப்பு கொம்பன் எனும் காளை ஜல்லிக்கட்டில் காயமடைந்து உயிரிழந்தது. இதற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் தனது தோட்டத்திலேயே இறுதி சடங்குகளை செய்தார்.
அது போல் சாலையில் அவர் காரில் செல்லும் போது இக்கட்டான சூழலில் இருப்போருக்கு உதவாமல் செல்லவே மாட்டார். விபத்துகளில் சிக்கிய பலருக்கும் அவர் முதலுதவி செய்து மருத்துவமனைகளுக்கு கொண்டு போய்விட்டுள்ளார். அந்த வகையில் புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களை தனது காரில் அழைத்து சென்றுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தனியார் கல்லூரியில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டி நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக அன்னவாசல் ஒன்றியத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். போட்டி முடிந்து பல மணி நேரமாகியும் அன்னவாசலுக்கு செல்லும் பேருந்துக்காக அவர்களும் ஆசிரியர்களும் காத்திருந்தனர்.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அந்த பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கிவிட்டு எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு அந்த மாணவர்கள் பேருந்துக்காக காத்திருக்கிறோம் என்றனர். முன்னாள் அமைச்சரோ எவ்வளவு மணி நேரமாக காத்திருக்கிறீர்கள் என கேட்டார்.
அதற்கு அந்த மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது சார் என்றனர். இதையடுத்து சரி இதற்கு மேல் காத்திருக்க வேண்டாம், என் காரில் விட்டுவிடுகிறேன் வாருங்கள் என அழைத்தார். மேலும் ஆசிரியர்களையும் அவர் காரில் ஏறிக் கொள்ளுமாறு அழைத்தார். அதன் படி ஓட்டுநரிடம் சொல்லிய விஜயபாஸ்கர், யார் எங்கு இறங்க வேண்டுமோ அங்கு பத்திரமாக இறக்கிவிட்டு வருமாறு தெரிவித்தாராம்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. விஜயபாஸ்கர் பொதுவாகவே பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் என யார் பஸ்ஸுகாக காத்திருந்தாலும் அந்த வழியாக சென்றால் அவர்களை தன் காரில் ஏற்றி விடுவது வழக்கம் என அந்த தொகுதி மக்கள் பெருமிதம் பொங்க தெரிவிக்கிறார்கள்.
-
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
தவெகவில் சேருங்கள்.. மெசேஜ் அனுப்பிய ஆதரவாளர்கள்.. சட்டென வீடியோ காலில் வந்த விஜயபாஸ்கர்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications