சென்னை மாணவி பாலியல் தாக்குதல்..அண்ணாமலையின் சாட்டையடி! நல்லா சர்க்கஸ் பண்றார்.. விமர்சித்த பிரபலம்!
புதுக்கோட்டை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். இந்நிலையில் அண்ணாமலை அரசியல் படிப்பதற்காக லண்டன் சென்றார் என கேள்விப்பட்டேன். இப்போதுதான் தெரிகிறது அண்ணாமலை 'சர்க்கஸ்' படிக்க லண்டன் சென்று வந்துள்ளார் என கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரான திருநாவுக்கரசர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர் போலீசார்.

மேலும் இது தொடர்பாக சென்னையில் பிரியாணி கடை நடத்தி வருபவரும், திமுகவை சேர்ந்தவருமான ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு கை கால்களில் மாவு கட்டு போடப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாணவி பாலியல் தாக்குதல்:
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மாணவியின் பெயர், விலாசம், தொலைபேசி எண் உள்ளிட்டவை அந்த எஃப்ஐஆர்-ல் இடம் பெற்று இருந்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.
பாஜக அண்ணாமலை:
மேலும் இதற்கு காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதோடு,"தி.மு.கவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். நாளையில் இருந்து 48 நாட்களுக்கு விரதமிருந்து அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனிடம் முறையிட உள்ளேன். நாளை காலை 10 மணிக்கு எனது இல்லத்திற்கு வெளியே எனக்கு நானே சாட்டையால் 6 முறை அடித்துக் கொள்ள போகிறேன்" என்று சபதமிட்டு, செய்தியாளர்கள் சந்திப்பின்போதே தனது செருப்பை அவர் கையால் கழற்றினார்.
தனக்குத் தானே சாட்டையடி:
இதற்கிடையே சொன்னது போலவே இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் தன்னைத்தானே சாட்டையால் எட்டு முறை அடித்துக் கொண்டார் அண்ணாமலை. தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் அவரை கட்டி அணைத்துக் கொண்டு இனிமேல் அடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். அண்ணாமலையின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
'சர்க்கஸ்' படிக்க லண்டன்:
இந்நிலையில், அண்ணாமலை அரசியல் படிப்பதற்காக லண்டன் சென்றார் என கேள்விப்பட்டேன். இப்போதுதான் தெரிகிறது அண்ணாமலை 'சர்க்கஸ்' படிக்க லண்டன் சென்று வந்துள்ளார் என கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரான திருநாவுக்கரசர். இதுதொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அண்ணாமலை அரசியல் படிப்பதற்காக லண்டன் சென்றார் என கேள்விப்பட்டேன். இப்போதுதான் தெரிகிறது அண்ணாமலை 'சர்க்கஸ்' படிக்க லண்டன் சென்று வந்துள்ளார் என..
கோமாளிகள்:
சர்க்கஸில் தான் கோமாளிகள் சாட்டையடித்து மக்களை மகிழ்விப்பர் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம் என அரசியல் போராட்டங்களுக்கு எவ்வளவோ வடிவங்கள் உள்ளது. ஆனால், அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் சர்க்கஸ் கோமாளிபோல் ஆகிவிட்டது. கிண்டல் கேலியாக மக்கள் பார்க்கின்றனர். நேற்று தொலைக்காட்சிக்கு முன் இரண்டு செருப்பையும் அரைமணிநேரம் எடுத்துக் காட்டி கொண்டிருக்கின்றார். மக்களுக்கு செருப்பு அணிய மாட்டேன் என்று சொன்னால் புரியாதா?
திமுக ஆட்சி:
ஐபிஎஸ் படித்த மனிதர் தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும். கோமாளி அரசியலை முன்னெடுக்க கூடாது. திமுக ஆட்சியை அகற்றும் வரையில் காலணியை அணியப்போவது இல்லை என்ற அண்ணாமலை சபதத்தை வெறும் வேடிக்கையாக வேண்டுமானால் பார்க்கலாம். அண்ணாமலை கசையடியால் கசங்கிப் போக கூடாது. அவர் நன்றாக இருக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications