குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை.. பரிசோதனையில் “ட்விஸ்ட்”.. மாவட்ட நிர்வாகம் தகவல்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்ததாக புகார் எழுந்த நிலையில், குடிநீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. ஆய்வில், குடிநீரில் நோய்க்கிருமி தொற்று இல்லை என தெரிய வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சங்கம் விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவாண்டான்தெருவில் 30-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும் 200-க்கும் மேற்பட்ட மாற்று சமூகத்தினரும் வசித்து வருகின்றனர். அந்த மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அங்கு இருக்கிறது.

இந்நிலையில் அந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் இருந்து வரும் குடிநீரை குடித்த பட்டியலின மக்கள் சிலருக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை ஆராய்ந்த போது அதில் மாட்டுச் சாணம் இருந்ததாக கூறப்பட்டது.
வேங்கைவயல் சம்பவம் போல, இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நீர் தேக்கத் தொட்டியில் உள்ள தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பவும், தொட்டியை சுத்தம் செய்யவும் உத்தரவிட்டார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சங்கம் விடுதி குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரி திருச்சியில் உள்ள மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் சங்கம்விடுதி குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதற்கான அறிகுறி இல்லை என்றும் தொட்டியில் உள்ள நீர் குடிப்பதற்கு உகந்ததுதான் என்றும் தெரியவந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
குடிநீர் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டு மாசுபட்டிருந்தால் அந்த நீரில் ஈகோலை பாக்டீரியா உருவாகி இருக்கும். ஆனால், அவ்வாறு பாக்டீரியா எதுவும் இல்லை என்றும் நீர் பகுப்பாய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொட்டியை நீண்டகாலமாக சுத்தம் செய்யாமல் இருந்ததால் பாசி படிந்திருக்கிறது என்றும் அதைப் பார்த்த சிலர் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாகத் தவறாகக் கருதி இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. அந்தச் சம்பவம் நடத்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என விமர்சிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் தான் சங்கம்விடுதியில் குடிநீரில் மாட்டுச்சாணம் கலந்ததாக வந்த புகார் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், அதில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications