புதுக்கோட்டையை "சாய்த்த" டீக்கடைக்காரர்..கலெக்டர் அருணா ரூமில் நுழைந்தது யார் தெரியுதா? சல்யூட் சார்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று, ஒட்டுமொத்த மக்களிடையே மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. யாரிந்த டீக்கடைக்காரர்? அப்படி என்ன நடந்தது புதுக்கோட்டையில் தெரியுமா?
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவானது, கேரளாவையே உலுக்கி போட்டுவிட்டது. நூற்றுக்கணக்கனோர் மண்ணோடு மண்ணாக உயிரிழந்துவிட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகள், உடமைகளை இழந்து கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது.

இதற்காக, இளகிய மனம் படைத்தவர்கள், நாட்டின் நாலாபுறமிருந்தும் உதவிகளை வயநாட்டில் செய்து வருகிறார்கள். நம்முடைய பக்கத்து மாநிலம் என்பதால், தமிழகத்திலிருந்து கூடுதல் உதவிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல் பிரமுகர்கள் முதல் தனிநபர்கள் வரை வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கொண்டிருக்கிறார்கள்.
மொய்விருந்து: அந்தவகையில், மொய்விருந்துகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நடத்தப்பட்டு வருகின்றன.. மொய் விருந்து என்பது, நாம் சாப்பிடும் சாப்பாட்டுக்கு பில் எதுவும் தர மாட்டார்கள்.. இதற்கு கட்டணமும் கிடையாது. மாறாக நாம் விரும்பிய தொகையை , விருந்து வைப்பவர்களுக்கு தரலாம்.. அந்தவகையில், திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மொய் விருந்துகள் நடத்தப்பட்டன.

மொய் விருந்தில் பலரும் சாப்பிட்டுவிட்டு, சாப்பாட்டுக்கு உண்டான தொகையை விட, அதிக தொகையை இலைக்கு அடியில் வைத்துவிட்டு சென்றார்கள்.. பெரும்பாலானோர் இலையின் கீழ் ரூ.500 முதல் ரூ.2500 வரை மொய் வைத்தனர். ஒருசிலர் பணமாக தராமல், "செக்" வைத்துவிட்டு போனார்கள். தங்களிடம் குறைவான பணத்தை வைத்திருந்தவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் செலுத்திவிட்டு போனார்கள்..
சிறுவர்கள்: இதுபோன்ற மொய்விருந்துகளில் சிறுவர்களும் பங்கேற்று வருகிறார்கள்.. விருந்துக்கு வரும்போதே, தாங்கள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தையும் கையோடு கொண்டு வந்திருந்தனர்.. வயநாடு மக்களுக்காக தங்கள் உண்டியல் காசை தருகிறோம் என்று சில்லறைகளை தந்துவிட்டு போகிறார்கள். இப்படி மொய்விருந்தில் கிடைத்த பணத்தை, வயநாட்டு மக்களுக்கு கொண்டுபோய் வழங்கி கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள்.
புதுக்கோட்டையிலும் இப்போது ஒரு மொய்விருந்து நடத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அருகே வம்பன் நால்ரோடு பகுதியில் சிவக்குமார் என்பவரும் வயநாடு மக்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.. இவர் சொந்தமாக டீக்கடை நடத்தி வருபவர்..

கஜா புயல், கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டங்களின்போதும், இப்படித்தான், பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார்.. மொய் விருந்து விருந்து நடத்தி நிதியுதவியையும் அளித்து வருகிறார்.. அதுபோலவே நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதி மக்களுக்கு உதவி அளிக்கும் வகையில், தன்னுடைய டீக்கடையிலேயே மொய் விருந்து நடத்தினார்.
இலவச டீ: அன்றைய தினம் தன்னுடைய கடைக்கு வரும் கஸ்டமர்கள் அனைவருக்குமே இலவசமாக டீ வழங்கினார்.. கஸ்டமர்களையும், தங்களால் முடிந்த தொகையை மொய் செலுத்த வைத்தார். அன்றைய தினம் மட்டும் மொத்தம் 43 ஆயிரத்து 200 ரூபாய் வசூலானதாம்.. அந்த பணத்தை DD-யாக எடுத்துக் கொண்டு, மாவட்ட கலெக்டர் அருணாவிடம் சென்றார். வயநாடு பகுதி மக்களுக்கு, உதவுவதற்காக இந்த நிதியை, கலெக்டரிடம் தந்தார் சிவக்குமார்..
டீக்கடைக்காரர் சிவக்குமார், வருடத்துக்கு 1,000 மரக்கன்றுகளை தன்னுடைய கஸ்டமர்களுக்கு வழங்கி வருகிறாராம்.. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கி வருகிறார்.. அதுமட்டுமல்ல, இந்த மரக்கன்றுகளை ஒரு வருடத்தில் யார் சிறப்பாக வளர்க்கிறார்களோ அவர்களுக்குப் பரிசுகளையும் அறிவிக்கிறார். சிறப்பாக மரக்கன்றுகளை வளர்த்தெடுத்த 10 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தலா ஒரு சில்வர் குடமும், ஹாட் பாக்ஸூம் சமீபத்தில் வழங்கினார்.
மாற்றுத்திறனாளி: மாற்றுத்திறனாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் பால் இலவசம் என்று அறிவித்து அதையும் நடைமுறைப்படுத்தி வருகிறார். அப்படித்தான் வயநாட்டு விஷயத்திலும் மொய்விருந்து நடத்த முடிவு செய்துள்ளார் சிவக்குமார். தன்னுடைய கடைக்கு வரும் கஸ்டமர்களிடம் இதை சொன்னதுமே அவர்கள் மிகவும் ஊக்கம் தந்தார்களாம்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மொய் விருந்து நடக்கும் என்றும், மொய் விருந்து செய்பவர்களுக்கு டீயும் வடையும் கொடுத்து உபசரிக்கப்படும் என்றும் அறிவிப்பு செய்து, கடைக்கு முன்பு ஒரு உண்டியலை, ஜிபே அட்டையை வைத்துவிட்டார்.. உடனே மளமளவென உண்டியலிலும், ஜிபே மூலமும் பணம் குவிந்துள்ளது.
சைக்கிள் மாணவன்: இதில் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் ஒருவன், ஆசை ஆசையாக சைக்கிள் வாங்குவதற்காக, சேமித்து வைத்திருந்த 5000 ரூபாயை, வயநாட்டு மக்களுக்காக தந்துவிட்டு போனானம். மொத்தமாக மொய்விருந்தில் ரூ. 48,200 சேர்ந்ததுமே, அதை கலெக்டரிடம் தந்துள்ளார் சிவக்குமார்.
ஒவ்வொரு முறையும் இடர்பாடுகளின்போது, சிவக்குமார் மனமுவந்து செய்யும் இந்த உதவிகள், மாவட்ட கலெக்டரையும், மாவட்ட மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி கொண்டிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications