இன்னும் ஐந்தாறு மாதம் தான்! இதே ED உங்க மீது பாயும்! அதிமுக -பாஜகவுக்கு அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை!
புதுக்கோட்டை: இன்னும் ஐந்தாறு மாதங்களில் இதே அமலாக்கத்துறை உங்கள் மீதும் பாயும் என அதிமுக -பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் ரகுபதி.
அமலாக்கத்துறை வந்தாலும் சரி, வருமான வரித்துறை வந்தாலும் சரி திமுகக்காரர்களை அச்சுறுத்த முடியாது என்றும் ஏனென்றால் திமுகவினர் அஞ்சாநெஞ்சர்கள் என்றும் தளபதியின் தம்பிகள் எனவும் சிலேடையாக பேசினார். அமலாக்கத்துறையின் அடுத்த ரெய்டு எந்த அமைச்சர் வீட்டில் என பரபரப்பாக விவாதங்கள் நடந்து வரும் சூழலில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

இதன் மூலம் நாளைக்கே தன் வீட்டுக்கு அமலாக்கத்துறை சோதனை நடத்த வந்தாலும் கூட ஒன்றும் கிடைக்காது என்பதை தான் அவர் இவ்வாறு சூசகமாக தெரிவித்துள்ளார். இதேபோல் 3 நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையை கலாய்க்கும் விதமாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''வா.. எப்ப வேண்டாலும் வா.. வீட்டு அட்ரஸ் தருகிறேன்'' எனக் கூறியிருந்தார்.
மடியில் கணமில்லாததால் தனக்கு வழியில் பயமில்லை என்றும் மோடிக்கும் பயப்படமாட்டேன், EDக்கும் பயப்பட மாட்டேன் என்றும் தாம் கலைஞரின் பேரன் எனவும் குரல் உயர்த்தியிருந்தார். இப்போது அமைச்சர் ரகுபதி அமலாக்கத்துறையை தைரியமாக விமர்சித்துள்ளதோடு பாஜக ஆட்சி இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் முடிந்துவிடும் என்பதையும் உரக்கக் கூறியிருக்கிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்பதை தான் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வாறு ஆட்சி மாற்றம் நிகழும் பட்சத்தில் அமலாக்கத்துறை உங்கள் மீது பாயும் என பாஜக -அதிமுகவுக்கு வெளிப்படையாகவே வார்னிங் கொடுத்திருக்கிறார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications