''ஓரம்போ...ஓரம்போ..ருக்குமணி வண்டி வருது''...பயணிகளுடன் 5 கி.மீ. ஆட்டோ ஒட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆட்டோ ஓட்டிச்சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இலுப்பூரில் இருந்து பெரியகுரும்பம்பட்டி வரை சுமார் 5 கி.மீ. தூரம் பயணிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆட்டோ ஓட்டினார.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மக்களை கவர்வதற்காகவே விஜயபாஸ்கர் விளம்பரம் செய்துள்ளார் என ஒருசிலர் கூறியுள்ளனர்.

பொங்கல் விழா
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சொந்த தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார். அங்குள்ள கிராம மக்களோடு, பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்.

விஜயபாஸ்கர் பாஸ்கர்
பின்னர் சொந்த ஊரான இலுப்பூரில் இருந்து தென்னலூர் கிராமத்திற்கு பொங்கல் விழாவிற்காக தனது காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது இலுப்பூர் சாலையில் ஒரு ஆட்டோவில் மாணவிகள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் பெரியகுரும்பம்பட்டிக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தனர்.

ஆட்டோ ஓட்டினார்
இதனை கவனித்த அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த ஆட்டோவை தானே ஓட்டிச் சென்று உங்களை சொந்த ஊரில் இறக்கி விடுவதாக அவர்களிடம் கூறினார். தொடர்ந்து அமைச்சர் அந்த ஆட்டோவில் ஏறினார். இதனால் ஆச்சரியமும், உற்சாகமுகம் அடைந்த பெண்கள், சிறுவர்கள், மாணவிகள் மகிழ்ச்சியோடு ஆட்டோவில் பயணிக்கத் தொடங்கினர்.

இது தேர்தல் விளம்பரம்
இலுப்பூரில் இருந்து சுமார் 5 கி.மீ தூரம் உள்ள பெரியகுரும்பம்பட்டி வரையில் ஆட்டோவை அமைச்சர் விஜயபாஸ்கர் ஓட்டிச் சென்றார். அதன்பின் அங்கு சிறுவர்கள் பெண்கள் மற்றும் மாணவிகளை இறக்கிவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் அமைச்சர் ஆட்டோ ஒட்டி செல்வது கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். ஆட்டோ ஒட்டி செல்லும் வீடியோவை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை விமர்சித்துள்ள ஒரு தரப்பினர் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மக்களை கவர்வதற்காகவே விஜயபாஸ்கர் விளம்பரம் செய்துள்ளார் என கூறியுள்ளனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications