2021 இறுதிக்குள் 'பாங்க் ஆப் தமிழ்நாடு'... திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா நம்பிக்கை..!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: தமிழக நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பாங்க் ஆப் தமிழ்நாடு இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு நேற்று வருகை தந்த அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து கருணாநிதி, அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

10 ஆண்டுகளுக்கு மேல்

10 ஆண்டுகளுக்கு மேல்

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சமூக வலைதளங்களில் திமுகவுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா. திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் தமது எழுத்தாற்றல், பேச்சாற்றல் மூலம் தக்க பதிலடி கொடுத்து வந்த இவருக்கு திமுக சிறுபான்மை அணி பிரிவில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. பிறகு தகவல் தொழில் அணிக்கு சென்ற இவர் இப்போது திமுக வெளிநாடு வாழ் தமிழர் நல அணியின் மாநில நிர்வாகியாக உள்ளார்.

வாய்ப்பு

வாய்ப்பு

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்து அதற்கான நேர்காணலிலும் கலந்துகொண்டார். நூலிழையில் இவருக்கான வாய்ப்பு பறிபோனது. இருப்பினும் தொடர்ந்து கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்த இவருக்கு இப்போது ராஜ்யசபா எம்.பி.பதவி தேடி வந்துள்ளது.

நட்பு வட்டம்

நட்பு வட்டம்

உதயநிதி ஸ்டாலினின் நட்பு வட்டத்தில் முக்கிய இடத்தில் இருந்தாலும் கூட, கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை தனது தொடர்புகளை விரிவுப்படுத்தி வைத்திருக்கிறார். இதேபோல் திமுகவில் புதுமுகங்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க தவறமாட்டார். இதனிடையே ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்ற அவருக்கு கட்சியை கடந்து பல்வேறு தரப்பினரும் இரண்டு நாட்களாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருவதோடு தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

செயல்பாடுகள்

செயல்பாடுகள்

இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எம்.அப்துல்லா எம்.பி., நாடாளுமன்றத்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எப்படி செயலாற்ற வேண்டும் என கட்சித் தலைமை உத்தரவிடுகிறதோ, அதன்படி தன்னுடைய செயல்பாடுகள் அமையும் எனக் கூறினார். மேலும், வெளிநாடு வாழ் தமிழர்களின் பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு முலம் நடவடிக்கை எடுப்பேன் என்ற உறுதியையும் அவர் அளித்துள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை

மேலும், இந்தாண்டு இறுதிக்குள் தமிழகத்தில் பாங்க் ஆப் தமிழ்நாடு துவங்கப்படும் என நம்பிக்கை தெரிவித்த அவர், அதற்கு முன், 'பேமென்ட் பாங்க்' விரைவில் துவங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த வங்கியில், தமிழக அரசு தான் பங்குதாரராக இருக்கும். இது ஒரு, 'ஷெட்யூல்டு பாங்க்' எனவும் தெரிவித்தார். பொருளாதாரத்துறையில் ஆழ்ந்த அறிவுடையவர் அப்துல்லா எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+