புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுக்கோட்டை முதல்வர் கோட்டை! அப்படியே டெல்லி செங்கோட்டையில் உங்கள..கோரிக்கை வைத்த எம்.எம்.அப்துல்லா

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முதல்வர் ஸ்டாலின் விரைவில் செங்கோட்டையிலிருந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்ற ஆவலை தெரிவித்து கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா கூறியதை திமுகவினர் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

புதுக்கோட்டையில் ரூ.165 கோடி மதிப்பிலான 1394 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பயனாளிகளுக்கு ரூ.397.30 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பேசிய மாநிலங்களை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, முதல்வர் செங்கோட்டையில் இருந்து நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென கூறினார்.

அமைச்சர் மெய்யநாதன் மீது எனக்கு டவுட் இருந்தது! மனதில் தோன்றியதை மறைக்காமல் பேசிய முதல்வர் ஸ்டாலின்!அமைச்சர் மெய்யநாதன் மீது எனக்கு டவுட் இருந்தது! மனதில் தோன்றியதை மறைக்காமல் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

நிகழ்ச்சியில் பேசிய அப்துல்லா," இது புதுக்கோட்டை மட்டுமல்ல முதல்வரின் கோட்டை. அத்தகைய புதுக்கோட்டைக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்திருக்கக்கூடிய எங்கள் நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கும் முதல்வர் அவர்களுக்கு வணக்கம். பொதுவாக ஒரு நதி கடலை தாண்டுவதில்லை. நதி என்று இருந்தால் அது கடலில் கலந்துவிடும். எந்த ஒரு ஆறாக இருந்தாலும் கடலை தாண்டி மீண்டும் கரைக்கு செல்வது என்பது இயலாத காரியம் உலகின் மிகப்பெரிய நதியான நைல் நதி கூட கடலில் கலக்கும்போது சுமார் 10 மைலுக்கு நன்னீராக கடலில் இருக்கும்.

கடல் கடக்க வைத்தவர்

கடல் கடக்க வைத்தவர்

20016ஆம் ஆண்டு தற்போதைய தமிழக முதல்வர் அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது வறண்ட மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொடுத்தவர் என மக்கள் மகிழ்ச்சியோடு கூறினார்கள். திருச்சியில் உள்ள காவிரி என்ற ஆற்றை 200 கிலோ மீட்டர் தள்ளி கடலையே கடக்க வைத்தவர் நம் முதல்வர். முடியாது என்பதையும் முடிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர் தான் நம் முதல்வர்.

ரத்த கண்ணீர்

ரத்த கண்ணீர்

முதல்வர் அவர்கள் இடத்தில் தற்போது நான் ஒரே ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். உங்கள் புண்ணியத்தில் நான் டெல்லிக்கு சென்று விட்டேன் நாடாளுமன்றத்தில் நிலைக்குழு உறுப்பினராக உத்தரப்பிரதேசம் பீகார் உள்ளிட்ட பகுதிகளைப் பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தப் பகுதிகளை பார்த்த போது ரத்த கண்ணீர் வந்தது. அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் எப்படி இருந்ததோ அதே போல் அந்த பகுதி இருக்கிறது.

டெல்லி செங்கோட்டை

டெல்லி செங்கோட்டை

இன்று நீங்கள் நடத்துவது திராவிடம் மாடல் அரசு இந்தியாவே பெருமைப்படும் அரசு. திராவிட இயக்கத்தின் நோக்கம் நாம் பெற்ற பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான். உங்களால் நாங்கள் பெற்ற நலன்களையும் வளங்களையும் அந்த மக்களும் பெற வேண்டும் நான் விரும்புகின்றேன் . புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நீங்கள் விரைவில் செங்கோட்டையிலிருந்து அந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்ற ஆவலை தெரிவித்து கொள்கிறேன்." என பேசினார். அவரது இந்த பேச்சினை அங்கிருந்த அனைவரும் ஆராவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர்.

English summary
DMK MP MM Abdullah said that Chief Minister Stalin, who is providing welfare assistance in Pudukkottai, expressed his desire to provide welfare assistance to the people from Red Fort soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X