சுஜித் சொல்லிக் கொடுத்த பாடம்.. பயனில்லாத ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் கொடுத்தால் பரிசு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Sujith Rescue Operation | தீயணைப்பு வீரர் அஜித்குமார்.. சொன்னது என்ன?-வீடியோ

    புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் அளித்தால் ரூ 1000 பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் சிக்கி மீட்கப்படுவதும், சில குழந்தைகள் பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூட அரசு அறிவுறுத்தியுள்ளது.

    Namakkal trsut awards Rs 1000 for details of unused borewells

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை உடனே மூடுமாறு ஆட்சியர் உமா மகேஸ்வரி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் குடிநீர், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பணிக்களுக்காக அமைக்கப்பட்டு பயன்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன.

    பல்வேறு இடங்களில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறுகளை உள்ளூர் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூடி வருகின்றனர். வடகாடு காவல் எல்லைக்குள்பட்ட கிராமங்கள் போடப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவது குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் அளித்தால் ரூ 1000 பரிசு அளிக்கப்படும் என நாமக்கல்லை சேர்ந்த ஒரு அறக்கட்டளை அறிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+