அறந்தாங்கியில் பெரியார் சிலையின் தலை துண்டிப்பு.. தி.க.வினர் மறியல்
புதுக்கோட்டை: அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவுகிறது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள பெரியார் சிலையின் தலையினை மர்ம நபர்கள் யாரோ இன்று அதிகாலையில் துண்டித்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த திமுக மற்றும் திராவிடர் கழகத்தினர் பட்டுக்கோட்டை சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி திராவிடர் கழகத்தினர் ஆவேச குரல் எழுப்பினர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சாலை மறியலை கைவிட செய்தனர்.
ஜாதி,மத வெறியர்களால் பெரியார் சிலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். பெரியார் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம் நிலவுவதால் அசம்பாவிதங்களை தடுக்க அறந்தாங்கியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications