Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புழுங்கும் புதுக்கோட்டை.. மீண்டும் மழை? புயலா? பகீர் தகவலால் மக்கள் பீதி.. ஓடிவந்த மாவட்ட நிர்வாகம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.. இது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.. என்ன காரணம்?

தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. குறிப்பாக தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.. இந்த பாதிப்பிலிருந்து, அம்மாவட்ட மக்கள் முழுமையாக விடுபடவில்லை.

Pudukkottai District Heavy Rain Floods Cyclone and Fake News Spread in Pudukkottai

வெள்ளநீரில் தென்மாவட்டங்கள் மிதந்து கிடக்கின்றன.. தற்போதுதான் வெள்ளநீர் வடிந்து கொண்டிருக்கிறது. தென்மாவட்டங்களை தவிர, பல்வேறு மாவட்டங்களிலும், நல்ல மழை பொழிவு இருந்து வருகிறது.

வானிலை மையம்: நேற்றுகூட வானிலை மையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், தமிழ்நாட்டிற்கு 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தது.. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருக்கிறது.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் குறித்த ஒரு செய்தி வாட்ஸ்அப்களில் விரைவாக பரவி வருகிறது.. அதாவது, வரும் 27 மற்றும் 28 ம் தேதிகளில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்ததுபோன்ற பெருமழை, புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்ய போகிறது" என்ற பொய் தகவல் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது..

பெருமழை: அனைத்து வாட்ஸ் அப் குழுக்களிலும் இந்த தகவல் பரவி வருவதால், அந்த மாவட்ட மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.. கடந்த சில தினங்களாகவே, பதற்றத்திலும், அச்சத்திலும், கலக்கத்திலும் பொதுமக்கள் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், பரவி வரும் வதந்திக்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.. புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், இந்த போலியான வாட்ஸ்அப் செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

திடீர் அறிவிப்பு: அந்த அறிவிப்பில், "கடந்த 21.12.2023 அன்று ஒரு நபர் வாட்ஸ்அப் வழியாக எதிர்வரும் 27.12.2023 மற்றும் 28.12.2023 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிக மழை பெய்யும் எனவும், அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளார். ஆனால் வானிலை எச்சரிக்கை மையத்திலிருந்து அவ்வாறான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

இவ்வாறு அதிகாரபூர்வமில்லாத தகவலை எண்ணி பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை. ஏதேனும் வானிலை எச்சரிக்கை வரப்பெற்றால் உடனடியாக செய்தி, ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்" என்று புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது... எனினும், வாட்ஸ்அப் தகவலால் ஏற்பட்ட பீதிகளிலிருந்து அம்மாவட்ட மக்கள் இன்னும் விடுபடவில்லையாம்.

உறுதி: இதனிடையே, அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசும்போது, ஒரு முக்கிய தகவலை கூறியிருந்தார்.. "புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகிற 38ம்தேதி மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சொல்கிறீர்கள்.. புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய மழையே வந்தாலும்கூட, அதனை எதிர்கொள்ளவும், மக்களை காப்பாற்றவும், மாவட்ட நிர்வாகமும் அரசு தயாராக இருக்கிறது.. மக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லாமலும் பாதுகாக்கப்படும் என்று அமைச்சர் உறுதி தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+