எடப்பாடி பெயரை தவிர்த்த அமித் ஷா! அப்போ முதல்வர் வேட்பாளர் யார்? ராஜேந்திர பாலாஜி பரபர பேச்சு

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் இப்போது அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ளது. அமித்ஷா சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமி பெயரைத் தவிர்த்திருந்தது அரசியல் அரங்கில் பேசுபொருள் ஆகியுள்ளது. இதற்கிடையே இது குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்திருந்த பேட்டியில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவின் பங்கு இருக்கும் என்று அமித்ஷா கூறியிருந்தார். மேலும், முதல்வர் குறித்த கேள்விக்கு அதிமுகவில் இருந்தே ஒருவர் முதல்வர் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி பெயரை அமித்ஷா குறிப்பிடவில்லை.

Rajendra Balaji says Edappadi is supreme is AIADMK BJP alliance as Amit Shah avoided his name

அமித்ஷா

இது தமிழக அரசியலில் பேசுபொருளானது. இதற்கிடையே அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராஜேந்திர பாலாஜி இது குறித்து விளக்கமளித்துள்ளார். புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி மார்த்தாண்டபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது இது குறித்து விளக்கமளித்தார்.

ராஜேந்திர பாலாஜி

இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி பேசுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்த வரை அதன் தமிழகத் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். பாஜக தேசியத் தலைமை, எடப்பாடி இரு தரப்பும் ஏற்றுக் கொண்ட முடிவு இது. இதில் கட்டளைத் தளபதி எடப்பாடி பழனிசாமி தான். கூட்டணியில் எல்லா முடிவுகளை எடப்பாடி பழனிசாமி தான் எடுப்பார். அவரது கருத்தே இறுதி கருத்து.

அதிமுக கூட்டணியில் விஜய்யின் தவெக வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது. தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தவெக வர வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது. திமுகவை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கவே எடப்பாடி பழனிசாமி முயன்று வருகிறார். அவரது செயல்பாடுகள் அதை நோக்கியே இருக்கிறது. அந்தப் பணி நிச்சயம் வெற்றியடையும்.

என்ன காரணம்

எந்த இடத்தில் எந்த அர்த்தத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடாமல் அமித்ஷா பேசினார் என்பது எனக்குத் தெரியாது. அதிமுகவில் இருந்து முதல்வர் என்றால் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்று அர்த்தம். தேர்தலுக்கு இன்னும் நிறையக் காலம் இருக்கிறது. இதனால் தேர்தல் நெருங்கும்போது இது குறித்துப் பேசலாம் என அமித்ஷா கருதியிருக்கலாம். அவர் அப்போது எந்தச் சூழலில் எந்த அர்த்தத்தில் அப்படிச் சொன்னார் என்று தெரியாது.

அதிமுகவின் கட்டளைத் தளபதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்டளைத் தளபதி எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர். அவர் சொல்லுவதுதான் இறுதிக் கருத்து.

ஒருங்கிணைந்த அதிமுக

மேலும், அதிமுக இப்போது ஒன்றாகத்தான் இருக்கிறது. டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்வார். மேலும், தேர்தல் வியூகங்கள், கூட்டணி, யாருக்கு எத்தனை சீட் என்பதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து கொள்வார். அவர் எடுக்கும் முடிவை ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் ஏற்றுக் கொள்வோம். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால் இப்போதே இதை நினைத்துப் பதற்றப்படத் தேவையில்லை. சரியான முடிவுகளைச் சரியான நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி முடிவு அறிவிப்பார்.

திமுகவை எதிர்க்கின்ற பலமான கூட்டணியாக அதிமுக பாஜக வலுவான கூட்டணி இருக்கிறது.. இந்தக் கூட்டணி தான் நிச்சயம் வெல்லும் கூட்டணி. அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. இந்தக் கூட்டணிக்குள் ஊடுருவி புகைச்சலை ஏற்படுத்த திமுக முயல்கிறது. ஆனால், அது நடக்காது" என்றார்.

அண்ணா மீதான விமர்சனம்

தொடர்ந்து அண்ணா விவகாரம் குறித்துப் பேசிய ராஜேந்திர பாலாஜி, "அண்ணாவை விமர்சிக்க ஒரு நொடியும் விடமாட்டோம் என்பதை எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சொல்லி, கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு தலைவர் அதைத்தான் செய்ய முடியும். அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள இந்த அற்புதமான நேரத்தில் அதில் கல்லைப் போட்டுப் பிரிக்கச் சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள். அதில் சிக்கிப் பலியாக மாட்டோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+