ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா
புதுக்கோட்டை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். ஜெயலலிதா தோழியும், அதிமுகவின் முக்கிய பவர் சென்டராக இருந்த சசிகலா தனிக்கட்சி தொடங்கி எடப்பாடி, ஓபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஜெயலலிதா இருந்த வரை வாலை சுருட்டிக் கொண்டிருந்தனர் என அவர்களை சசிகலா கடுமையாக விமர்சித்துள்ளார்.
அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா புதுக்கோட்டையில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், "நான் நன்னிலம் செல்கிறேன். அங்கு நான் கேட்கிற கேள்விக்கு நம்மிடம் இருந்து ஓடிபோயுள்ள முன்னாள் அமைச்சர் எனக்கு பதில் சொல்லியாக வேண்டும். அதையும் பாருங்கள் கொஞ்சம். இவர்கள் எல்லாம் திருப்பி எம்எல்ஏ ஆகவே கூடாது.

வாலை சுருட்டி..
அம்மா இருந்போது எல்லாரும் வாலை சுருட்டி கொண்டிருந்தனர். அதன் பிறகு நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் இருந்திருக்கும். நான் பெங்களூர் சென்றுவிட்டதால் மிகவும் துளிர்விட்டு போய்விட்டது. அதையெல்லாம் சரி செய்வதற்காக தான் நாம் ஆட்களை நிறுத்தியுள்ளோம். இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் எம்எல்ஏ ஆகிவிட கூடாது.
காரணம் இவர்கள் மக்களுக்கு பணி செய்பவர்கள் கிடையாது. அவர்களின் மனது மாறுகிறது. மனது மாறுபவர்களால் மக்களுக்கு உண்மையான பணியை செய்ய முடியாது. நான் காயம்பட்டவர்களுக்கு ஆறுதலாக உள்ளேன். மக்களுடன் தான் கூட்டணி அமைத்துள்ளேன். இந்த தேர்தலை மக்களின் உரிமைகளுக்கான தேர்தலாகத்தான் பார்க்கிறேன்.
துரோகிகள்
கட்சியையும், ஆட்சியையும் நம்பி ஒப்படைத்தேன். ஆனால் என்னையே ஏமாற்றிவிட்டனர். அவர்கள் இருவரும் துரோகிகள். நான் எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. என் கூட்டணி தமிழக மக்களுடன் தான். மக்கள் பலத்தை நம்பியே நான் களம் காண்கிறேன். மக்களின் உரிமைகளுக்கான தேர்தலாக இந்த தேர்தலை சந்திக்க உள்ளேன்" என்றார்












Click it and Unblock the Notifications