ட்விஸ்ட்.. யார் அந்த விஐபிகள்?.. பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திருச்சி ராஜா பரபர வாக்குமூலம்
பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்த முயன்ற நபர் கைது
காரைக்குடி: தன்னிடம் பணிபுரியும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற ராஜா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. முக்கிய விவிஐபிகளுடன் பெண்களை அனுப்பி வைத்ததாக அப்போது போலீசில் ராஜா வாக்குமூலம் தந்துள்ளது பரபரப்பை கிளப்பி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலும் திருச்சியிலும் திருமண வரவேற்பு ஏற்பாட்டு நிறுவனம் ஒன்றை "கலக்கல் ஈவண்ட் மேனேஜ்மென்ட்" என்ற பெயரில் நடத்தி வருபவர் ராஜா...
திருமண வரவேற்பின்போது டான்ஸ் ஆடுவதற்காகவே 30 பெண்களை இவர் வேலையிலும் வைத்துள்ளார்.. ஆனால், அந்த பெண்களை மது குடிக்கவைத்து ஆபாச வீடியோ எடுப்பதாகவும், பிறகு அவர்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் சொல்லப்பட்டது.

டான்ஸ் பெண்கள்
இந்நிலையில், இவரிடம் பணியாற்றி வரும் தஞ்சையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் வரை தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாகவும், ஆனால் அந்த பெண் மறுப்பு தெரிவித்தும்கூட ராஜா தொடர்ந்து வற்புறுத்தியபடியே வந்துள்ளதாகவும் தெரிகிறது.. இதனால், அந்த பெண் மனமுடைந்த நடந்த சம்பவம் குறித்து தன்னுடைய நண்பர்களிடம் சொல்லி அழுதுள்ளார்.

வைரல் வீடியோ
அந்த நண்பர்களும் இதை கேட்டு, ஒரு கல்யாண ரிசப்ஷன் இருப்பதாக சொல்லி, ராஜாவை காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூருக்கு அழைத்து, வேலை செய்கிற பெண்கள் பாலியல் தொழிலுக்கா கூப்பிடறே? என்று சொல்லி சரமாரியாக சுற்றி வளைத்து அடித்துள்ளனர்.. இந்த வீடியேவும் சோஷியல் மீடியாவில் வைரலானது. பெண்கள் தாக்கியது குறித்து ராஜா, சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக பணியாற்றிய மாயவதனிடம் புகார் தெரிவித்தார்...

வாக்குமூலம்
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணும், மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார்.. இந்த புகாரின்பேரில் சாக்கோட்டை ஸ்டேஷனில் அப்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்... இறுதியில் அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்...

விபச்சாரம்
அதாவது, இவரிடம் 10 நிமிடத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை வாங்கி தருவதாக சொல்லி பாலியல் தொழில் ஈடுபடுத்த முயன்றுள்ளார். அவர் மறுக்கவே தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்... இதுதான் பிரச்சனையாக வெடித்துள்ளது... ராஜா, பெண்களிடம் பேசும் ஆடியோவும், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட ராஜா வற்புறுத்தும் ஆடியோவும், ராஜாவை இளைஞர்களும், பெண்களும் சுற்றி நின்று தாக்கும் வீடியோவும் இந்த 2 நாட்களாகவே சோஷியல்மீடியாவில் வைரலாக பரவியது..

வாக்குமூலம்
இந்நிலையில், ராஜாவிடம் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போது முக்கிய விவிஐபிகளுடன் பெண்களை அனுப்பி வைத்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்களை ராஜா போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.. ராஜா சொன்ன தகவல்களை போலீசார் சேகரித்து வைத்து கொண்டுள்ளனர்.. இதனடிப்படையில் முக்கிய விஐபிக்கள் பலர் சிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.. உயரதிகாரிக்கு தெரிவிக்காமல் தானாகவே பெண்களிடம் விசாரணை செய்த, போலீஸ்காரர் மாயவதன் மீதும் துறைரீதியான நடவடிக்கை பாயும் என்றும் சொல்லப்படுகிறது.

புகார்
அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட தஞ்சை பெண், மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கும் புகாரை அனுப்பியிருந்ததால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண்களிடமும் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.. இதனால் இந்த பிரச்சனை விஸ்வரூபமெடுக்கிறது.. அத்துடன், ராஜா சொன்ன அந்த விஐபிக்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

வீடியோ
ராஜா மேலும் சொல்லும்போது, "நான் யாரையும் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தவில்லை... வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட சில பெண்களுடன் விடுதியில் மது அருந்தியது உண்மை தான்... அப்போது அவர்களை வீடியோ எடுத்தேன்... அதுவும் உண்மைதான்.. ஆனால், அதற்கு அந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த விவகாரத்தில் தான் என்னை தனியாக வரவழைத்து அவர்கள் தாக்கினர்...

குற்றச்சாட்டு
அப்போது என்னிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் தங்க நகைகள், மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.. இதுதொடர்பாக என்னுடைய நண்பரான போலீஸ் ஏட்டுவிடம் புகார் தெரிவித்தேன்... நகை-பணத்தை மட்டும் வாங்கி கொடுக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டேன்.. ஆனால், புகாராக கொடுத்தால் பெரிய பிரச்சனை ஏற்படும் என்பதால்தான் நான் அதை செய்யவில்லை. எனக்காகத்தான் போலீஸ் ஏட்டு சம்பந்தப்பட்ட பெண்களிடம் விசாரித்தார்... ஆனால் அதற்குள் புகாரை மாற்றி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கி விட்டனர்..

திட்டம்?
ராஜா சொல்வது அத்தனையும் உண்மை தானா? என்பது குறித்து புகார் கொடுத்த பெண்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.. இந்த வழக்கில் போலீஸ் ஏட்டுவிடம் விசாரணை நடைபெற்ற பிறகுதான் உண்மை நிலவரம் தெரியவரும் என்கிறார்கள்.. மற்றொரு புறம் பாலியல் தொழிலில் சம்பந்தப்பட்டதாக சொல்லப்படும் விஐபிக்கள் யார் என்ற லிஸ்ட்டும் எடுக்கப்பட்டு வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications