என்னங்க இது கொடுமை.. பட்டியலின மக்களின் தண்ணி தொட்டியில் "மலம்" கலந்த கொடூரர்கள்.. நம்ம ஊரில்தான்
தண்ணீர் டேங்க்கில் சமூக விரோதிகள் அசுத்தம் செய்ததால் உடல்உபாதைகள் ஏற்பட்டுள்ளன
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அருகே ஒரு கிராமத்தில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, தமிழக மக்களே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்கள்.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் துரிதமாக கையில் எடுத்து, அந்த சமூகவிரோதிகள் யார் என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள்..!!
பெரும்பாலான வடமாநிலங்களில் கல்வியறிவு கிடைக்காத நிலைமை உள்ளது.. அதாவது, கல்வி மறுக்கப்பட்டு வருகிறது.. மற்றொருபுறம் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக பரவலாக கூறப்பட்டு வருகிறது..
இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களும், வன்முறைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.. இந்த நிகழ்வுகளை எதிர்த்து போராட்டங்கள் நிறைய நடத்தப்பட்ட போதிலும், அந்தந்த மாநில அரசுகளை எதிர்க்கட்சிகள் கண்டித்தபோதிலும், இதே நிலைமைதான் தொடர்கிறது.

மாட்டிறைச்சி
குறிப்பாக மாட்டிறைச்சி தடை குறித்த அறிவிப்புக்கு பிறகு, பசு பாதுகாப்பு அமைப்பினரால் தாக்குதல்கள் அதிகரித்து, கொலைகளும் நடைபெற்று வருகின்றன. அதாவது, இந்தியாவில் பசு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து மனித உயிர்களை தாக்குவதும், கொடூரமாக அடித்து கொல்வதும் தொடர்கதையாகி வருகிறது... அதேபோல, தலித் மக்கள் மீதான வன்முறை அட்டகாசங்களும் பெருகி வருகின்றன.. இப்படித்தான் சில மாதங்களுக்குமுன்பு, காசியாபாத் மாவட்டத்தில் தாசனா என்ற பகுதி உள்ளது.. இங்கு வசிக்கும் 14 வயது இஸ்லாமிய சிறுவனுக்கு திடீரென தாகம் எடுத்துள்ளது..

தாகமே தாகம்
அதனால்,அந்த பகுதியில் இருந்த ஒரு கோயில் குழாயில் தண்ணீர் குடிக்க சென்றுள்ளார்.. அப்போது, ஷிரங்கி நந்தன் யாதவ் என்பவர், சிறுவன் தண்ணீர் குடிப்பதை பார்த்து விட்டார். அந்த சிறுவனிடம் வந்து, பெயர் என்ன என்று கேட்டுள்ளார்.. பெயரை சிறுவன் சொன்னதுமே, யாதவ் டென்ஷனாகிவிட்டார்.. அங்கேயே கண்மூடித்தனமாக சிறுவனை தாக்கி சிறுவன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த வீடியோவை இந்த நாடே பார்த்து மிரண்டது.

பேரதிர்ச்சி
இந்த பாகுபாடு, நம்ம தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. கல்வி கிடைத்தால், எல்லாமே இங்கு ஒழிக்கப்பட்டு விடும் என்று மலைபோல் நாம் நம்பி கொண்டிருந்தால், அப்படிப்பட்ட கல்வி நிலையங்களிலேயே சாதி தலைவிரித்தாடுகிறது.. கடந்த மாதம் ஈரோட்டில் அரசு தொடக்கப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்தி உள்ளார் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை.. ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைக்கும் நிகழ்வு முதல் இன்னும் ஏராள ஏராள சம்பவங்கள் நம் தமிழகத்தில் நடப்பது கவலைக்குரியதாக உள்ளது.

குடிநீர் ஆதாரம்
இதோ இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் அருகே இறையூர் வேங்கைவயல் என்ற கிராமம் உள்ளது... இந்த கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு பக்கத்திலேயே, ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது... இந்த தொட்டியின் குடிநீரைதான், அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.. இன்னும் சொல்லப்போனால், இந்த தொட்டிதான், அவர்களுக்கு இருக்கும் ஒரே குடிநீர் ஆதாரம் ஆகும்.. இந்நிலையில், கடந்த 3 நாட்களாகவே, அந்த பகுதி மக்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.. பெரும்பாலான மக்கள், ஒவ்வாமை பிரச்சினையால் அவதிப்பட துவங்கினர்.

செத்த விலங்கு
இதனால், பாதிக்கட்டவர்கள் அனைவரும், மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.. அப்போது சாப்பாடு அல்லது குடிநீரில் ஏதேனும் பிரச்சினை இருந்திருக்கலாம் என்று சொல்லி டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சையும் தந்தனர்.. வெறும் 3 நாட்களுக்குள்ளேயே, பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டதால், ஒருவேளை, அந்த குடிநீர் தண்ணீர் தொட்டியில் ஏதேனும் விலங்கு இறந்து கிடக்கலாம் என்று நினைத்து, தண்ணீர் தொட்டியில் ஏறி பார்த்துள்ளனர்... அப்போதுதான் தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதை பார்த்து, கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிளீனிங்
இதையடுத்து, தொட்டியில் உள்ள தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.. தற்போது தொட்டியை சுத்தப்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது.. இது தொடர்பாக போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளதையடுத்து, இந்த காரியத்தை செய்தத சமூக விரோத விரோதிகள் யார் என்ற விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர். வடமாநிலங்களில்கூட இப்படியெல்லாம் அக்கிரமம் நடந்ததில்லை.. இதெல்லாம் நடந்து கொண்டிருப்பது நம்ம தமிழ்நாட்டிலா? என்ற அதிர்ச்சிதான் பீறிட்டு கிளம்புகிறது..!!
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications