புதுக்கோட்டையில் பரவசம்.. "மெய்யாலுமே" அவரா? அது யாரு பக்கத்துல.. நெகிழ வைத்த மேடை.. கசிந்த கரிசனம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் தந்துவருகிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருவருக்கு, "குடை பிடிப்பது" என்பதே இப்போதெல்லாம் டிரெண்டாகிவிடுகிறது.. குடை பிடிக்கும் நிகழ்வுகள், சிலசமயம் பரபரப்பாகிவிடுகிறது. சில சமயம், சர்ச்சையாகி விடுகிறது, சில சமயம் நெகிழ்ச்சியை கூட்டிவிடுகிறது.

Super incident in Pudukkottai and Do you know minister Meyyanathan holding umbrella for the poets

கர்நாடக மக்களுக்கும் ராஜ்யோத்சவா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மத, பேதம் இல்லாமல் மக்களுக்கு நிம்மதி, மகிழ்ச்சியை வழங்க வேண்டும் என்று தாய் புவனேஸ்வரி, அல்லா, இயேசுவிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என மக்கள் சாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த்: இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே திடீரென மழை வந்துவிட்டது.. அப்போது, கர்நாடகாவில் தோட்டக்கலை அமைச்சராக இருக்கும் முனிரத்னா, ரஜினிகாந்துக்கு குடை பிடித்தார்.. இந்த குடை பிடித்த வீடியோ இணையத்தில் அடுத்தடுத்த நாட்களுக்கு டிரெண்டாகி கொண்டே இருந்தது.. எங்க சூப்பர்ஸ்டார் பவரை பாருங்க என்று ரஜினி ரசிகர்கள், வீடியோவை ஷேர் செய்தபடியே இருந்தனர்.

இந்த குடைபிடிக்கும் சம்பவம் சில சமயம் சர்ச்சையாகவும் உருவெடுத்துகிறது.. அமைச்சர் சேகர்பாபுவுக்கு, மேயர் பிரியா குடை பிடித்த சம்பவம் இப்படித்தான் நம் தமிழகத்தில் பரபரப்பானது.

மேயர் பிரியா: ஆனால், மேயர் பிரியா ஒரு பேட்டியில் இதற்கான விளக்கத்தை தந்து, மொத்த யூகங்களையும் நொறுக்கி தள்ளிவிட்டார்.. "அன்றைய தினம், நானும், அமைச்சரும் கூட்டம் தொடர்பாக ஆலோசிக்க வேண்டியிருந்ததால், குடை பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.. மற்றபடி, அவருக்கு நான் குடைபிடிக்க வேண்டிய அவசியமோ, எனக்கு அவர் குடை பிடிக்க வேண்டிய அவசியமோ இல்லை..

இன்னும் சொல்லப்போனால், அந்த வீடியோவை முழுமையாக பார்த்தால், மாண்புமிகு அமைச்சர், எனக்கும் குடை பிடித்தார்.. ஆனால், நான் அவருக்கு குடை பிடித்ததை மட்டும், கிராப் செய்து விட்டார்கள்" என்று விளக்கம்தந்து, விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இப்போது ஒரு குடைப்பிடிப்பு சம்பவம் நெகிழ்ச்சியை கூட்டி வருகிறது.. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ராஜேந்திரபுரம் கடை வீதியில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா கவியரங்கம் நடந்தது.. இந்த நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Super incident in Pudukkottai and Do you know minister Meyyanathan holding umbrella for the poets

சிறப்பு: கவிஞர்கள் ஒவ்வொருவராக, கவிதைகளை மைக்கில் வாசித்து கொண்டிருந்தனர்.. அப்போது, கவியரங்கம் நடந்து கொண்டிருக்கும்போதே, திடீரென்று பலத்த மழை வந்துவிட்டது.. இதனால், அனைத்து பொதுமக்களும் கலைந்து செல்ல முயன்றனர்.. அப்போது, திடீரென மேடையிலிருந்த அமைச்சர் மெய்யநாதன், கவிஞர்கள் பேச்சை நிறுத்தவிடாமல், அவர்களுக்கு குடை பிடித்து நின்றார்.. இதைப்பார்த்த கவிஞர்களும், தொடர்ந்து கவிதைகளை வாசித்தனர்.

குடை பிடித்த வீடியோ: அதேபோல, சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் குடை பிடித்தவாறு கவிஞர்களின் பேச்சை கேட்டு ரசித்தனர்.. மேடையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தாலும், மழை வந்துவிட்டதால், அனைத்து தலைவர்களுமே கையில் குடையுடன் எழுந்து நின்றுவிட்டனர்..

மழை நிற்கும்வரை அவர்கள் அனைவருமே நின்றபடியே, கவிஞர்களின் பேச்சை ரசித்தனர். அமைச்சர் மெய்யநாதன் கவிஞர்களுக்கு பலத்த மழையிலும் குடை பிடித்து நின்று, அவர்களை பேசவைத்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+