கம்பர் வடமொழி கற்காவிட்டால் ராமாயணம் கிடைத்திருக்குமா?.. ஆளுநர் தமிழிசை கேள்வி
புதுக்கோட்டை: என்றுமே நாம் நண்பர்களால் உயரப் போவதில்லை, எதிரிகளால்தான் நாம் உயர போகிறோம் என புதுவை துணை நிலை ஆளுநரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதுக்கோட்டையில் கம்பன் கழகம் சார்பில் 47வது கம்பன் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நாளான இன்று தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், எங்கெல்லாம் கலாச்சாரமும், இறை வணக்கமும், கலாச்சார படியான பழக்க வழக்கங்களும் இல்லையோ அங்கெல்லாம் பிரச்சனைகள் உருவாகும் என்பதைதான் கம்பன் எடுத்துரைக்கிறார்.

நண்பர்கள்
என்றுமே நாம் நண்பர்களால் உயரப் போவதில்லை, எதிரிகளால்தான் நாம் உயர போகிறோம். மீம்ஸ் போடுவதை நீங்கள் பெருமையாக கருதுகிறீர்கள், நான் வெட்கமாக கருதுகிறேன். மேலும் கம்பர், இன்னொரு மொழியை கற்றுக் கொண்டு, அதில் தேர்ச்சி பெற்று, அதில் உள்ள நல்லவற்றை எடுத்து, தமிழை மக்களுக்கு கொடுத்தார் அதுதான் மொழிப்பற்று.

கம்பர்
கம்பர், வடமொழியை கற்கவில்லை என்றால் எப்படி கம்பராமாயணம் கிடைத்திருக்கும். 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல் எப்படி கிடைத்திருக்கும். ஆனால் இங்கே இன்னொரு மொழியை கற்றுக்கொள் என்றாலே பாய்ந்து, பாய்ந்து தாக்குகிறார்கள். தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியைதான் ஊக்கப்படுத்துகிறது.

தாய்மொழி
தாய் மொழியில் தான் கல்வி கற்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் இன்னொரு மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு கம்பனே உதாரணம். மேலும் இன்னொரு மொழியை கற்பதால் தமிழ் வளர்ந்தது. ஆனால் இங்கே தமிழிசை ஹிந்திசையா என்று கேட்கின்றனர்.

வேற்ரு மொழி
நான் பேசும் அளவுக்கு தமிழை பேச முடியாதவர்கள் கூட வேற்று மொழியை கற்பதற்கு யோசிக்கிறார்கள். எட்டு வயது வரை பல மொழிகளை கற்றுக் கொள்ளும் அளவிற்கு மூளை செயல்பாடு உள்ளது. குறுகிய வட்டத்திற்குள் அனைத்தையுமே அரசியல் ஆக்கி விடாதீர்கள்.

கம்பனுக்கு இத்தனை புகழ்
புதுக்கோட்டையில் மட்டும் நடைபெறும் கம்பனுக்கு இவ்வளவு புகழ் என்றால், உலகம் முழுவதும் எடுத்துரைத்தால் தமிழ் இவ்வுலகையாளும் என்றார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications