Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக்கை அடித்து நொறுக்கிய பெண்கள்! புதுக்கோட்டையில் இரவில் பதற்றம்.. இளைஞர் கொலையால் கோபம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை அருகே மோட்டார் சைக்கிளில் நின்ற 25 வயது நிரம்பிய இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் டாஸ்மாக் கடை மீது கல், கட்டைகளை வீசி சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேஷன் (வயது 25). இவர் மரம் வெட்டும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று இரவு முருகேஷன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகே மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் முருகேஷன் ரத்தம் சொட்ட சொட்ட சரிந்து விழுந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து வேகமாக இடத்தை காலி செய்தனர்.

women-ransacked-tasmac-shop-in-pudukottai-after-youngster-murdered

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த முருகேஷனை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முருகேஷன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முருகேஷன் கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்தவுடன் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் ஒரு தரப்பினர் கொலை நடந்த டாஸ்மாக் கடை அருகே கூடினர். அங்கு அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முருகேஷனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இந்த வேளையில் சில பெண்கள் கோபத்தின் உச்சிக்கு சென்றனர். முருகேஷன் கொலைக்கு அங்கள்ள டாஸ்மாக் கடை தான் காரணம். அங்கு மதுபானம் குடித்து வந்தவர்கள் தான் முருகேசை கொலை செய்துள்ளதாக குற்றம்சாட்டினர். அப்போது சில பெண்கள் டாஸ்மாக் கடைக்கு சென்றனர். இரவு 10 மணியை தாண்டிய நிலையில் டாஸ்மாக் அடைக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் விடாத பெண்கள் அங்கிருந்த கல், கட்டைகளை எடுத்து டாஸ்மாக் கடை மீது வீசினர். அதோடு டாஸ்மாக் கடையை சுற்றி தகரத்தால் அமைக்கப்பட்ட வேலியை அவர்கள் அசைத்து பெயர்த்து எடுத்தனர். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெண்களை சாமதானம் செய்தனர். கொலை செய்த நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இருப்பினும் அங்கிருந்தவர்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எஸ்பி பேச்சுவார்த்தை நடத்த விரைந்துள்ளார். அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+