கூப்பிட்ட பெண்.. மறுத்த கள்ளக்காதலன்.. வீடியோ வெளியிட்டு தூக்கில் தொங்கிய காதலி.. ஆலங்குடி ஷாக்

கள்ளக்காதலன் தன்னை சந்திக்க வராததால் பெண் தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: கள்ளக்காதலனை வீட்டுக்கு வர சொல்லி கூப்பிட்டார் 32 வயது ராஜேஸ்வரி.. ஆனால், அவர் வராததால், மனம் உடைந்த பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு, ஃபேனில் தூக்கு மாட்டி தொங்கியும் விட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கேவி கோட்டையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி.. 32 வயதாகிறது.. இவரது கணவன் சுப்பிரமணியன்.. கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகிறது.. 2 மகன்கள உள்ளனர்.

young woman committed suicide near pudukottai

ஆனால், கணவருடன் கருத்து வேறுபாட்டால் ராஜேஸ்வரி பிரிந்து வந்துவிட்டார்.. காரைக்குடி பர்மா காலனி சொக்கலிங்க நகரில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

அப்போதுதான் பிரபுதேவாவுடன் காதல் வந்துவிட்டது.. கேவி கோட்டையை சேர்ந்தவர் இந்த பிரபுதேவா... இந்த காதல் அளவுக்கு மீறி எல்லை மீறி வேற லெவலில் வளர்ந்துள்ளது. எந்நேரமும் போனிலும் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், தன்னை பார்க்க வருமாறு ராஜேஸ்வரி பிரபுதேவாவை வீட்டுக்கு அழைத்தாராம்.. ஆனால், பிரபுதேவா வரவில்லை.. அதனால் மனம் உடைந்த ராஜேஸ்வரி, தற்கொலை செய்ய முடிவெடுத்துவிட்டார்.. அதற்காக ஒரு வீடியோவில் இந்த காரணத்தை பேசி, அவருக்கு அதை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துவிட்டு, ரூமில் உள்ள ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வீடியோவை பார்த்த பிரபுதேவாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.. அதனால் ராஜேஸ்வரி வீட்டு ஹவுஸ் ஓனருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்.. பிரபுதேவாவுக்கு மேல் ஷாக் ஆன ஹவுஸ் ஓனர், உடனடியாக ராஜேஸ்வரி வீட்டு கதவை திறந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

இதையடுத்து, ராஜேஸ்வரியின் சகோதரர் கார்த்திக்ராஜா காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்ததையடுத்து விசாரணை நடந்து வருகிறது. கள்ளக்காதலன் தன்னை பார்க்க வராதால், மனம் உடைந்த பெண் தற்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+