ஜூட் விட்ட இளைஞர்.. 2 கண்டிஷன் போட்ட நீதிபதி.. கர்ப்பிணிக்கு கோர்ட் வாசலிலேயே தாலி கட்டி.. சபாஷ்

கோர்ட் வளாகத்தில் கர்ப்பிணியை திருமணம் செய்துள்ளார் இளைஞர்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றியதுடன், கர்ப்பமாக்கிவிட்டு சென்ற இளம்பெண்ணையே, கோர்ட் வளாகத்தில் இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வடக்குப்பட்டி வடகாடு பகுதியை சேர்ந்தவர் ராம்கி.. 30 வயதாகிறது.. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.. அவருக்கு 23 வயதாகிறது.

இருவரும் நெருங்கி பழகினர்.. அவரையே கல்யாணம் செய்து கொள்வதாக கூறி, அந்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டார்.

 திருமணம்

திருமணம்

தான் 2 மாதம் கர்ப்பமாக உள்ளதை, ராம்கியிடம் தெரிவித்து, விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.. ஆனால், ராம்கி திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணி பெண், ஆலங்குடி மகளிர் போலீசில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் செய்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும் ராம்கி மீது வழக்குப்பதிந்து, இறுதியில் கைது செய்தனர்.

 விசாரணை

விசாரணை

இது தொடர்பான வழக்கு ஆலங்குடியில் உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது... இதனிடையில் ராம்கி இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார்.. எனினும், வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது... அப்போது தன்னால் கர்ப்பமடைந்த பெண்ணையே திருமணம் செய்வதாக ராம்கி தெரிவித்திருந்தார்..ஆனால், அவர் சொன்னபடி அந்த பெண்ணை திருமணம் செய்யவில்லை..

 கர்ப்பம்

கர்ப்பம்

இதனால் மறுபடியும் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்... எனவே, தனக்கு ஜாமீன் தர வேண்டும் என்று கேட்டு மதுரை ஹைகோர்ட்டில் ராம்கி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ராம்கி மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.. அப்போது கர்ப்பிணி பெண்ணும் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

 கவுன்சிலிங்

கவுன்சிலிங்

வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தார்.. ராம்கி தன்னுடைய காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் நீண்ட காலம் ஜெயிலிலேயே இருக்க நேரிடும் என்று எச்சரித்தார். அத்துடன் இரு தரப்பினரும் சமரசம் பேசி தீர்வு காண வேண்டும் என்றும், இரு தரப்பு வழக்கறிஞர்களும் கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்யும் நீதிபதி உத்தரவிட்டார். மறுபடியும் ஜெயிலா என்று அதிர்ந்து போனார் ராம்கி..

 பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதையடுத்து இரு வீட்டு குடும்பத்தினரும் சமரசம் பேசினர்.. சமரச பேச்சுவார்த்தையில் அந்த பெண்ணை திருமண செய்து கொள்ள ஒப்புக் கொண்டார். கோர்ட்டு வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு ராம்கி, கர்ப்பிணிக்கு மஞ்சள் தாலி கட்டினார்... அப்போது இரு வீட்டு குடும்பத்தினர்களும், வக்கீல்கள் உடன் இருந்தனர்... தவறுகளை செய்துவிட்டு, ஜாமீனிலும் எளிதாக தப்பித்துவிடலாம் என்ற நினைக்கும் ஏமாற்று பேர்வழிகளுக்கு, நீதிபதியின் இந்த உத்தரவு ஒரு பாடமாக அமைந்துள்ளது..

பெண் போராட்டம்

பெண் போராட்டம்

பெண்ணை திருமணம் செய்வதாக வாக்களித்துவிட்டு மறுத்துவிட்டதால்தான் 2வது முறை ஜெயிலுக்கு செல்ல நேர்ந்தது.. இப்போது மீண்டும் ஒரு ஏமாற்று வேலையை செய்துவிடக்கூடாது என்பதற்காகவே அதிரடி திருமண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இந்த விஷயத்தில் போராடி வெற்றி பெற்றுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.. அதனால்தான் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் நடையாய் நடந்து, இறுதியில் ஏமாற்றிய காதலனையே கரம் பிடித்துள்ளார்.. அந்த இளம் பெண்ணின் தைரியமும், மன உறுதியும்தான் கடைசியில் வென்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+