மேலவை தேர்தலில் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த பாஜக எம்.எல்.ஏ காலமானார்.. அடுத்தடுத்து 2 உயிரிழப்பு!
புனே : மகாராஷ்டிரா மேலவை தேர்தலில் ஆம்புலன்சில் வந்து வாக்களித்த பா.ஜ.க எம்.எல்.ஏ லட்சுமண் ஜக்தாப் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்து வந்த லட்சுமண் ஜக்தாப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
ஜக்தீப்பின் மறைவுக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் புனே தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ முக்தா திலக் காலமானார். இந்நிலையில் இன்று பாஜக எம்.எல்.ஏ லக்ஷ்மண் ஜக்தாப் மறைந்துள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ மறைவு
மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ லக்ஷ்மண் ஜக்தாப். இவருக்கு வயது 59. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன் புனே தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ முக்தா திலக் காலமானார். இந்நிலையில் இன்று பாஜக எம்.எல்.ஏ லக்ஷ்மண் ஜக்தாப் காலமானார். இதனால், புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் ஆகிய இரு தொகுதிகளும் காலியாகி உள்ளன.

மூன்று முறை எம்.எல்.ஏ
சிஞ்ச்வாட் எம்.எல்.ஏவாக மூன்று முறை பதவி வகித்தவர், லக்ஷ்மண் ஜக்தாப்.
காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஜக்தாப், 1999ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். என்.சி.பி தலைவர் அஜித் பவாரின் நம்பிக்கையானவராகக் கருதப்பட்ட ஜக்தாப், 2004 ஆம் ஆண்டில், அக்கட்சியில் சீட் கொடுக்காததால் புனேயில் இருந்து சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். பின்னர் ஜக்தாப் மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜக்தாப் 2014-ல் பாஜகவில் இணைந்தார்.

ஜக்தாப் உடல்நிலை
ஜக்தாப்பின் உடல்நிலை புற்று நோய் பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும், கட்சிக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் அவர் தொடர்ந்து கலந்துகொண்டார். கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில், ஜக்தாப்பின் உடல்நிலை மோசமடைந்தது மற்றும் அவர் ஒரு மாதம் ஐசியுவில் இருந்தார் பின்னர் அவரது உடல்நிலை மேம்பட்டு அவர் வீடு திரும்பினார். இந்நிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த லக்ஷ்மண் ஜக்தாப் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். பிம்பிள் குராவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. ஜக்தீப்பின் மறைவுக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்தார்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார் ஜக்தாப். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் மாதத்தில் மேலவை தேர்தல் நடந்தது. இதில், ஜக்தாப் மற்றும் திலக் ஆகிய இருவரையும் வாக்களிக்கச் செய்வதற்காக ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். உடல்நலம் பாதித்த அவர்கள் வாக்களிப்பதற்காக ஆம்புலன்சில் வந்து சென்றனர். ஆம்புலன்சில் பயணம் செய்து மும்பையில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களித்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏக்நாத் ஷிண்டே இரங்கல்
லக்ஷ்மண் ஜக்தாப் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே , "பிம்ப்ரி-சின்ச்வாட்டில் இருந்து பிரபலமான அரசியல் தலைவராக லக்ஷ்மன் ஜக்தாப் இருந்தார். எம்.எல்.ஏ.வாக இருந்த அவர், தனது தொகுதியில் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு பிரபலமானவர். அவரது மரணத்தால் பா.ஜ.க ஒரு உண்மையான விசுவாசியை, வலிமையான தலைவரை இழந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications