"யூ-டர்ன்".. தொற்று குறையவே இல்லை.. மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு.. உத்தவ் தாக்கரே அதிரடி
மகாராஷ்டிராவில் தளர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
புனே: மகாராஷ்டிராவில் இன்றுமுதல் ஊரடங்கு தளர்த்தப்டும் என்று சொல்லப்பட்ட நிலையில், திடீரென அம்மாநில அரசு ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் தொற்று அதிகமாகி கொண்டிருக்கிறது.. இவைகளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன,.
அந்த வகையில், நாட்டில் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று.. இந்த 2வது பரவல் அங்குதான் அதிகமாக கிலியை தந்து வருகிறது..

அறிவிப்பு
கடந்த மாதம், ஒருநாளைக்கு 50 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் அங்கு உருவானது.. இதற்கு நடுவில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுவிட்டது.. இதனால் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் சிவசேனா அரசு திண்டாடி விட்டது. இதற்கு பிறகுதான் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது... முழு லாக்டவுனையும் போட்டது.

எண்ணிக்கை
இதையடுத்து மெல்ல மெல்ல கொரோனா கேஸ்கள் குறைய ஆரம்பித்தன.. ஒருநாளைக்கு 20 ஆயிரம் வரை வந்து பாதிப்பு எண்ணிக்கை நின்றது.. இப்போதுகூட, 2 லட்சத்து 16 ஆயிரம் பேர் அந்த மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில், தொற்று குறைந்து வருவதால் ஊரடங்களில் சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்தது.. அந்த அறிவிப்பை 5 நிலையாக பிரித்து வெளியிட்டது..

அரசு அறிக்கை
தொற்று பாதிப்பு சராசரி 5 சதவீதத்துக்கு குறைவாகவும் , ஆக்சிஜன் படுக்கை ஆக்கிரமிப்பு 25 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் முழு தளர்வும் அறிவிக்கப்பட்டது.. மேலும், 18 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அம்மாநிலத்தின் அமைச்சர் விஜய் வடேட்டிவர் அறிவித்திருந்தார்.. ஆனால், இப்போது முழு ஊரடங்கு நீட்டிப்பதாக அரசு திடீரென அறிவித்திருக்கிறது.

தாக்கரே
இதற்கு காரணம் பல கிராமப்புற பகுதிகளில் இன்னமும்கூட தொற்று பரவியிருக்கிறது.. முழுமையாக பாதிப்பு குறையவில்லை.. அதனால், ஊரடங்கு முழுமையாக தளர்த்தும் நிலைமை இல்லை என்று அம்மாநில அரசு அறிக்கை விடுத்து தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், தளர்வுகள் குறித்த பரிசீலனைகள் நடந்து வருவதாகவும, முதல்வர் உத்தவ் தாக்கேர இது சம்பந்தமாக இறுதி முடிவு எடுப்பார் என்றும் அந்த அறிக்கையில் அரசு விளக்கம் தந்துள்ளது..!












Click it and Unblock the Notifications