நான்தான் அப்பவே சொன்னேனே.. கொரோனா வைரஸ் நம் மீது ஏவப்பட்ட உயிரி ஆயுதம்.. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பகீர்
கொரோனா வைரஸ் சில நாடுகளின் சதியால் வந்தது என ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
புனே: கொரோனா வைரஸ் இயற்கையாக பரவியது அல்ல, அது சில நாடுகளின் சதியால் பரப்பப்பட்டது என ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல்முறையாக கொரோனா எனும் வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸ் சீனாவில் முதல்முறையாக வுகான் மார்க்கெட்டில் வவ்வாலில் இருந்து பரவியதாக சொல்லப்படுகிறது. இதனால் சீனாவில் பலர் உயிரிழந்தனர்.
சீனாவில் இருந்து 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவியது. இந்த வைரஸ் தும்மும்போது தெறிக்கும் நீர்த் துளிகள், சளி மூலம் பரவுகிறது. இதன் அறிகுறிகளாக உயர் காய்ச்சல், சளி, உடல் வலி, மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட என சொல்லப்பட்டது.

கொரோனா பரவல்
இந்த கொரோனா பரவல் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர். ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமல் பல நோயாளிகள் இறக்க நேரிட்டது. இந்த நோய் பரவுவதை தடுக்க பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளை தவிர வேறு எந்த கடைகளும் திறக்கப்படவில்லை.

அரசு, தனியார் அலுவலகங்கள்
அது போல் அரசு , தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்பில் படித்தனர். சீனாவிலிருந்து பரவிய இந்த கொரோனா வைரஸ் வேண்டுமென்றே பரப்பப்பட்ட உயிரி ஆயுதம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டின. மேலும் அந்த வைரஸை சீன வைரஸ் என்றே முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைத்திருந்தார்.

வேலை இழப்பு
கொரோனா பரவலால் பலர் வேலையை இழந்தனர். ஊதிய குறைப்பும், ஊதியமின்மை உள்ளிட்ட கொடுமைகளும் நிகழ்ந்தன. விமானம், ரயில், பேருந்து போக்குவரத்துகள் முடங்கியதால் வேலையும் இல்லாமல் உணவுக்கு வழியில்லாமல் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றனர்.

கொரோனா பாதிப்பு
இன்று வரை பலர் கொரோனா பாதிப்பால் வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்த கொரோனாவுக்கு அரசு தடுப்பூசி கண்டுபிடித்து அதை மக்கள் போட்டு கொள்வதை கட்டாயமாக்கியது. இரு டோஸ்கள் கொண்ட இந்த தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டன. அது மட்டுமல்லாமல் மக்கள் கூடும் இடங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு ஊசிகள் போடப்பட்டன.

கொரோனா முதல் அலை
இந்த கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என பாடாய்படுத்தி தற்போது நான்காம் அலை வந்துள்ளது. இதனால் பெரிய அளவிற்கு எந்த பாதிப்பும் இல்லை, ஆனாலும் ஓரிரு நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த நோய் இயற்கையாக பரவியதே இல்லை என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம்
மகாராஷ்டிர மாநிலம் அகோலா நகரில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசும் போது ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வருகிறது. 2 ஆண்டுகளாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் இந்த நோய் இயற்கையாக பரவியது இல்லை என நான் கூறியிருந்தேன். சில நாடுகள் வேண்டுமென்றே செய்த திட்டமிட்ட சதி என்றும் அது உயிரி ஆயுதம் என்றும் கூறியிருந்தேன்.

சீடர்கள்
என்னுடைய சீடர்கள் இந்த விஷயத்தை எல்லாம் வெளியே கூற வேண்டாம். அது சர்ச்சையை ஏற்படுத்தும் என்றார்கள். ஆனால் நான் கூறியது இப்போது நிரூபணமாகிவிட்டது. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய நாடுகள், அவை இருக்க வேண்டிய திறனுடன் இல்லை என கூறி வருகின்றன. அவை கொரோனா பரவலை நிறுத்தவில்லை என்றும் கூறுகின்றன. மேலும் தடுப்பூசி குறித்து போதிய தகவல்களும் இல்லை என கூறியிருந்தன.

மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்துகள்
ஆனால் மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என நான் உணர்ந்தேன். இதற்காக என்.ஏ.ஓ.கியூ.19 (NAOQ19) உற்பத்தி செய்யப்பட்டு, 14 மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த என்.ஏ.ஓ.கியூ.19 கொரோனா வைரசை குணப்படுத்தும் மருத்துவத்தில் பயன்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் உள்ள பல பெரிய பல்கலை கழகங்களுக்கு இந்த என்.ஏ.ஓ.கியூ.19 அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதில் இந்த மருந்து வெற்றி பெறும் என மக்களும் உணர்ந்தனர். செல்லுலார் சோதனையிலும் அது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதனால், நமது நாட்டின் யோகா மற்றும் ஆயுர்வேதம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ரவிசங்கர் கூறியுள்ளார்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications